Connect with us

சூர்யா 45 படத்தில் த்ரிஷா – மீண்டும் மாஸ் காம்போ!

Featured

சூர்யா 45 படத்தில் த்ரிஷா – மீண்டும் மாஸ் காம்போ!

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான “கங்குவா” திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புடன் வெளியானபோதும் வசூல் ரீதியாக தோல்வியடைந்தது. ஆனால், அதன்பின் சூர்யா கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அவரது 44-வது படத்தில் நடித்து முடித்துள்ளார். பின்னர், சூர்யா ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் அவரது 45-வது படத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

இந்த படத்திற்கு “ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்” நிறுவனம் தயாரிக்கின்றது, மற்றும் ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பார். தற்போது, சூர்யா 45 படத்திற்கு ஒரு புதிய அப்டேட் வெளியாகியுள்ளது, அதாவது, கோவையில் சூர்யா 45 படத்தின் சூட்டிங்கில் நடிகை த்ரிஷா இணைந்துள்ளதாகவும், முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனால், “ஆறு” படத்தை தொடர்ந்து சூர்யாவுடன் த்ரிஷா மீண்டும் பல ஆண்டுகள் கழித்து நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top