Connect with us

திடீரென ரஜினியை சந்தித்த கமல் ஹாசன் – இதுதான் காரணம்!

Featured

திடீரென ரஜினியை சந்தித்த கமல் ஹாசன் – இதுதான் காரணம்!

இந்திய திரையுலகில் முன்னணியில் உள்ள இரு பிரமுகர்களாக ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் அறியப்படுகின்றனர். சுமார் 50 ஆண்டுகளாக திரையுலகத்தில் தொடர்ந்து பயணித்து வரும் இவர்களின் நட்பு அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என சினிமாவின் அனைத்து துறைகளிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ள கமல் ஹாசன், 2018ஆம் ஆண்டு அரசியலில் களமிறங்கினார். அதன் பின்னர், 2021ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் அவரது கட்சி போட்டியிட்டது. எனினும், அவர் எதிர்பார்த்த வெற்றியை அந்த தேர்தலில் பெற முடியவில்லை. இதனையடுத்து, திமுகவுடன் கூட்டணி அமைத்த கமல் ஹாசன், தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுள்ளார். இதற்காக திரையுலக பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் அவரது மீது பாராட்டுகள் கூறி வருகின்றனர்.

இந்த மகிழ்ச்சியை தனது நீண்ட நாள் நண்பரான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் பகிர்ந்துகொள்ள, அவரை நேரில் சந்திக்க கமல் ஹாசன் அவரது இல்லத்திற்கு சென்றார். அந்த சந்திப்பின்போது எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள கமல் ஹாசன், “என்னுடைய புதிய பயணத்தை என் நண்பர் ரஜினியுடன் பகிர்ந்துகொண்டேன். நான் மகிழ்ச்சியடைகிறேன்” என தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மாளவிகா–ரியோ ஜோடி: ஆண்பாவம் பொல்லாதது வசூலில் டாப்!

More in Featured

To Top