Connect with us

அப்பா, அம்மா பிரிவின் பின் ஸ்ருதிஹாசனின் வாழ்க்கையில் நடந்த மாற்றம்..

Featured

அப்பா, அம்மா பிரிவின் பின் ஸ்ருதிஹாசனின் வாழ்க்கையில் நடந்த மாற்றம்..

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை ஸ்ருதிஹாசன், தந்தை கமல்ஹாசன் மற்றும் தாய் சரிகா தம்பதிக்கு பிறந்தவர். அவரது வாழ்க்கையில், தனிப்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கூறும் ஒரு பேட்டியில், தந்தை மற்றும் தாயின் வேறுபாடுகள், அவரது ஆன்மீக நம்பிக்கைகள் பற்றி அவர் பேசினார்.

ஸ்ருதிஹாசன் கூறியதாவது, “என் அம்மா ஆன்மீகத்தில் நம்பிக்கை உள்ளவர். ஆனால் அப்பா நார்த்திகர். அதனால் வீட்ல யாரும் கோயிலுக்குப் போக அனுமதி இல்லை. எனக்கு கடவுள் மீது அதிக நம்பிக்கை உண்டு. அதனால் என் அப்பாவுக்கு தெரியாமல் தாத்தாவுடன் சென்று வருவேன். இந்த விஷயம் அப்பாவுக்கு ரொம்ப நாட்களாக தெரியாமல் இருந்தது,” என்று அவர் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, ஸ்ருதி, “நான் இன்று இந்த இடத்தில் தைரியமாக இருப்பதற்கு கடவுள் மேல் உள்ள நம்பிக்கை தான் காரணம்” என்று கூறி, தனது வாழ்க்கையில் கடவுளின் மேல் உள்ள நம்பிக்கையின் முக்கியத்துவத்தை விளக்கியுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top