Connect with us

‘புஷ்பா 2’ படத்தின் அந்த பாடலில் இந்த பிரபல நடிகையா?!

Cinema News

‘புஷ்பா 2’ படத்தின் அந்த பாடலில் இந்த பிரபல நடிகையா?!

அல்லு அர்ஜுன் நடித்த ’புஷ்பா’ என்ற திரைப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. ’புஷ்பா’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது வசூலில் சாதனை செய்தது என்பது தெரிந்தது.

ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தின் வெற்றிக்கு சமந்தா நடனமாடிய ’ஊ சொல்றியா மாமா, ஊஊ சொல்றியா மாமா’ என்ற பாடலும் காரணம் என்பதும் இந்த பாடலில் நடனம் ஆடுவதற்காகவே ஒரு பெரிய தொகையை சமந்தாவுக்கு கொடுக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது.

இந்தநிலையில் தற்போது ’புஷ்பா 2’ படத்திலும் ஒரு ஐட்டம் பாடல் இடம்பெறப் போவதாகவும் அதில் சமந்தா நடனமாட முடியாது என்று கூறிவிட்டபடியால் சில பிரபல நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல் படி தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக இருக்கும் ஸ்ரீ லீலா ’புஷ்பா’ படத்தின் ஐட்டம் பாடலுக்காக நடனமாட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில் வெளியான ’குண்டூர் காரம்’ உள்பட பல சூப்பர் ஹிட் படங்களில் தொடர்ச்சியாக ஸ்ரீ லீலா நடித்து வரும் நிலையில் அவர் ’புஷ்பா 2’ படத்தில் ஒரு ஐட்டம் பாடல் நடனமாட இருக்கிறார் என்ற தகவல் தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  திரையரங்குகளில் வசூல் வேட்டை நடத்தும் அரண்மனை 4 - இதுவரை எவ்ளோ வசூல் தெரியுமா..?

More in Cinema News

To Top