Connect with us

SA vs IND 2nd ODI | தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வெல்லுமா இந்திய அணி..? டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச முடிவு..

Featured

SA vs IND 2nd ODI | தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வெல்லுமா இந்திய அணி..? டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச முடிவு..

இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்க அணிகளுக்கு இடயிலான 2nd ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்ரிக்கா அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.

தென்னாப்பிரிக்கா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் 3 டி20 போட்டி கொண்ட தொடரில் விறுவிறுப்பாக விளையாடி வருகிறது .

இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் கடந்த 17 ஆம் தேதி அன்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்ரிக்கா அணியை வீழ்த்தியது.

இதையடுத்து கெபெர்ஹாவில் உள்ள உலக புகழ் பெற்ற மைதானத்தில் இன்று 2nd ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. இதில் இந்திய அணிக்கு எதிராக டாஸ் வென்ற தென்னாப்ரிக்கா அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.

இதையடுத்து தென்னாப்ரிக்கா அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் தற்போது களத்தில் பேட்டிங் செய்து வருகின்றனர்.

ஸ்கை மேன் சூரியகுமார் தலைமையிலான இளம் படை டி20 தொடரில் பட்டயகிளப்பிய நிலையில் கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி ஒரு நாள் தொடரில் ஆதிக்கம் செலுத்துமா இல்லையா என்பதை நாம் காத்திருந்தது பார்க்கலாம் .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top