Connect with us

விரைவில் மகான் 2 – விக்ரம் போட்ட பதிவால் உச்சகட்ட எதிர்பார்பில் ரசிகர்கள்

Cinema News

விரைவில் மகான் 2 – விக்ரம் போட்ட பதிவால் உச்சகட்ட எதிர்பார்பில் ரசிகர்கள்

சியான் விக்ரம் மற்றும் துருவ் விக்ரமின் அசத்தலான நடிப்பில் உருவான மகான் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தருமாறு தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரும் இவருடைய செல்ல மகனான துருவ் விக்ரமும் இணைந்து நடித்திருந்த திரைப்படம் மகான்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்று சூப்பர் டூப்பர் ஹிட் படமாக உருவெடுத்தது.

நடிகர்களின் நடிப்பை தாண்டி சந்தோஷ் நாராயணனின் இசையும் இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியுள்ளதை யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

இந்நிலையில் தற்போது மகான் திரைப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் வெற்றிகரமாக நிறைவேறியுள்ள நிலையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ள சியான் விக்ரம் மகான் பார்ட் 2 என்ற கேப்சனையும் போட்டுள்ளார்.

இதனால் விக்ரமின் ரசிகர்கள் நியாயம் மகான் பார்ட் 2 வரும் என்ற சந்தோஷத்தில் இப்போதே கொண்டாட ஆரம்பித்துவிட்டனர்

நடிகர் விக்ரம் தற்போது அவரது 62 வது படத்தில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மிக குறைவான மதிப்பெண் பெற்ற மாணவன் - ஒன்று கூடி கொண்டாடிய ஊர் மக்கள்..!!

More in Cinema News

To Top