Connect with us

சோனியா காந்தியை போலவே இருக்காங்களே..!வைரலாகும் புகைப்படம்!

Cinema News

சோனியா காந்தியை போலவே இருக்காங்களே..!வைரலாகும் புகைப்படம்!

இப்போதெல்லாம் திரை பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், அரசியல் வாதிகள் போன்றவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகி வெளியாகி இருக்கிறது…அதற்கு நல்ல ஒரு டிமாண்ட் கூட இருக்கின்றது…

அப்படி கடைசியாக மறைந்த நடிகையும் – முதலமைச்சருமான ஜெ.ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாறு தயாராகி வெளியாகி இருந்தது…இதற்கு நல்ல வரவேற்பு இருந்தது…

தற்போது மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கையை தழுவி யாத்ரா என்ற படம் தயாராகி வருகிறது….இந்த படத்தின் போஸ்டர் கூட சமீபத்தில் வெளியானது…

இயக்குனர் மஹி வி ராகவ் இயக்கத்தில் தயாராகும் இப்படத்தில் ஒய்.எஸ்.ஆர் கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் மம்முட்டி நடிக்கிறார்.ஜெகன் மோகன் ரெட்டி கதாபாத்திரத்தில் நடிகர் ஜீவா நடிக்கிறார்…அதுவே தமிழ் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது..

இந்த படத்தில் சோனியா காந்தியாக ஜெர்மன் நடிகை சுசானே பெர்னார்ட் நடிக்கிறார்…இவர் பல்வேறு விளம்பர நிகழ்ச்சிகள் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார்..அதில் இவர் பிரபலமானவர்.

இவர் மறைந்த நடிகர் அகில் மிஸ்ராவின் மனைவி ஆவார்.சோனியா காந்தியாக இவர் நடிக்கும் காட்சியின் புகைப்படம் வெளியாக அதைப்பார்த்த ரசிகர்கள் அவரை பார்த்தது போலவே இருக்கு என கமெண்ட் சொல்லி வருகின்றனர்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top