Connect with us

பொங்கலுக்கு ட்ரீட் கொடுக்க தயாரான SK, வெற்றி கூட்டணியில் ரவி மோகன்

sivakarthikeyan

Cinema News

பொங்கலுக்கு ட்ரீட் கொடுக்க தயாரான SK, வெற்றி கூட்டணியில் ரவி மோகன்

SK: நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. இந்த படத்தை இயக்கியுள்ளார் சுதா கொங்கரா. இது சிவகார்த்திகேயனின் 25-வது திரைப்படமாகும்.

இறுதி கட்ட படப்பிடிப்பு சிதம்பரம் மற்றும் இலங்கை உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்றது. படப்பிடிப்பு நிறைவு விழாவில், சிவகார்த்திகேயன் தன்னுடன் பணியாற்றிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த படத்தில் ஸ்ரீலீலா, பசில் ஜோசப், ரவி மோகன், அதிர்வா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பெரும் பட்ஜெட்டில் உருவாகியுள்ள “பராசக்தி” படம், சிவகார்த்திகேயனை ஒரு புதிய வடிவில் காண்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படம் 2026ம் ஆண்டு பொங்கல் வெளியீடாக வெளியாகும் என தயாரிப்புக் குழு அறிவித்துள்ளது. இதற்கான டீசர் விரைவில் வெளிவரும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. “என் இதயத்துக்கு மிக அருகில் இருக்கும் படம் ‘பராசக்தி’,” என்று சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். ரவி மோகன் நடிப்பில் சமீபமாக வெளிவந்த படங்கள் எதுவும் பேசும் படியாக இல்லை.

அதனால் சிவகார்த்திகேயன் சுதா கொங்கரா கூட்டணியில் இணைந்திருக்கும் ரவி மோகனுக்கு இப்படம் வெற்றிவாகை சூடும் என்ற நம்பிக்கையில் காத்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் வருகிற பொங்கல் அன்று சிவகார்த்திகேயன் அதர்வா மற்றும் ரவி மோகனுக்கு வெற்றிப்பாகை சூடுகிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் டான் படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகி இருக்கிறார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தீபாவளி ரிலீஸ்களில் பைசன் vs டியூட் – ரசிகர்கள் யாருக்கு கைகொடுக்கிறார்கள்?

More in Cinema News

To Top