Connect with us

‘நடிப்பு அரக்கன்’ இயக்கத்திற்குத் திரும்புகிறார் – எஸ்.ஜே.சூர்யாவிடம் இருந்து செம அப்டேட்!

Featured

‘நடிப்பு அரக்கன்’ இயக்கத்திற்குத் திரும்புகிறார் – எஸ்.ஜே.சூர்யாவிடம் இருந்து செம அப்டேட்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்தவர் எஸ்.ஜே.சூர்யா. இயக்கத்திலிருந்து ஒதுங்கியிருந்தாலும், தற்போது பிஸியான நடிகராக தனது பயணத்தை தொடர்கிறார். நடிப்பில் சிறந்த கலைஞராகவும், ‘நடிப்பு அரக்கன்’ என்ற வர்ணனைக்கு உரியவராகவும் மதிப்படைவதுடன், தற்போது அவர் மீண்டும் இயக்குநராக மாறவிருக்கிறார்.

கில்லர் என்ற தலைப்பில் எஸ்.ஜே.சூர்யா இயக்கவிருக்கும் புதிய படம் குறித்த தகவலை அவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த படத்தை கோகுலம் சினிமா நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது என்பதையும், அதற்கான சில படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். சில படங்களை மட்டுமே இயக்கியிருந்தாலும், இன்று வரை பலரின் பிடித்த இயக்குநராகத் திகழ்கிறார் எஸ்.ஜே.சூர்யா. அவருடைய முதல் இயக்கமான ‘வாலி’ திரைப்படத்தில் அஜித் கதாநாயகனாக நடித்திருந்தார். அந்தப் படத்துக்காக எஸ்.ஜே.சூர்யா சம்பளமே பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேக்கிங் மற்றும் கதையமைப்பில் அவரது உழைப்பு படத்தை மெகா ஹிட்டாக்கியது.

அதற்குப் பிறகு, விஜய் – ஜோதிகா ஜோடியில் ‘குஷி’ படத்தை இயக்கினார். அது வெற்றி பெற்றதுடன், கோலிவுட்டில் முக்கியமான இயக்குநராக அவர் மாறினார். ‘குஷி’ படத்திற்கு முதன்முறையாக லட்சக் கணக்கில் அட்வான்ஸ் தொகையை பெற்ற அவர், அந்தப் பணத்தில் தனது ஏழு உதவி இயக்குநர்களுக்குப் புது பைக்குகளை வாங்கித் தந்தார். இந்த தகவல் சமீபத்தில் வெளியாகி, பலரின் பாராட்டை பெற்றது. தொழில்நுட்ப வசதிகள் அதிகரிக்காத காலத்திலேயே, ‘நியூ’ என்ற சைன்ஸ் ஃபிக்ஷன் படத்தை எடுத்து வெற்றியடைந்தவர். அன்பே ஆருயிரே, இசை உள்ளிட்ட படங்களிலும் புதிய முயற்சிகளை செய்துள்ளார். பின்னர் இயக்கத்தில் இருந்து ஓரங்கட்டிய அவர், தற்போது நடிப்பில் தனது தனித்துவத்தைக் காட்டி வருகிறார்.

அவரது நடிப்பில் வெளியான சமீபத்திய திரைப்படங்கள் ‘இந்தியன் 2’, ‘ராயன்’ (தமிழ்), ‘சரிபோதா சனிவாரம்’, ‘கேம் சேஞ்சர்’ (தெலுங்கு) ஆகியவை விமர்சன ரீதியாக பெரிதாக வெற்றிபெறவில்லை. எனினும், படைப்பாற்றலைக் குறைக்காமல், தற்போது “கில்லர்” என்ற படத்தை இயக்கவிருப்பதாக அறிவித்துள்ளார். இந்த புதிய முயற்சியால், இயக்குநர் சூர்யா திரும்ப வருவதை ஆவலோடு எதிர்பார்க்கின்றனர் அவரது ரசிகர்கள்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top