Connect with us

அட்டகாசமாக வந்தது சிவகார்த்திகேயனின் 25வது பட அறிவிப்பு: செம கூட்டணி!

Featured

அட்டகாசமாக வந்தது சிவகார்த்திகேயனின் 25வது பட அறிவிப்பு: செம கூட்டணி!

சிவகார்த்திகேயன், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்த அமரன் திரைப்படம் கடந்த வருடங்களில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இந்த படம் ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக கொண்டது மற்றும் ₹300 கோடியை அட்டகாசமாக வசூலித்து, சிவகார்த்திகேயனை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக நிலைநாட்டியது.இந்த வெற்றியுடன், சிவகார்த்திகேயன் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

சுத்தா கொங்கரா இயக்கத்தில் அவரது 25வது படத்திற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. பல வதந்திகளும் கிசுகிசுக்களும் பரப்பப்பட்டிருந்த நிலையில், இது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. முன்னணி இயக்குனர் சுதா கொங்கரா மற்றும் சிவகார்த்திகேயன் இதன் மூலம் இணையும் என்று கூறப்படுகிறது. இதில் சிவகார்த்திகேயன் மற்றும் ஸ்ரீலீலா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர், மேலும் ஜெயம் ரவி மற்றும் அதர்வா போன்ற பிரபல நடிகர்கள் முக்கிய ரோல்களில் நடித்துள்ளார்கள்.

இந்த படத்தின் பூஜை நிகழ்ச்சியின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளதுடன், Dawn Pictures தயாரிப்பு நிறுவனமும் இதனை டுவிட்டரில் அறிவித்துள்ளது.

இது நிச்சயமாக சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு ஒரு புதிய எதிர்பார்ப்பு உருவாக்கியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top