Connect with us

அந்த ஒரு காட்சிக்காக 5 முறை படத்தை பார்த்தேன் – சிம்பு உடைத்த ரகசியம்!

Featured

அந்த ஒரு காட்சிக்காக 5 முறை படத்தை பார்த்தேன் – சிம்பு உடைத்த ரகசியம்!

மணிரத்னம் இயக்கத்தில், கமல், சிம்பு, த்ரிஷா, அபிராமி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள ‘தக் லைஃப்’ திரைப்படம், ஜூன் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இந்த படத்தின் முதல் பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. சமீபத்தில், திரிஷா நடனத்தில் வெளியாகிய இரண்டாவது பாடல் ‘சுகர் பேபி’ பாடலும் ரசிகர்களிடையே பிரபலமாகி வருகிறது. இந்நிலையில், ‘தக் லைஃப்’ பட புரமோஷனில் நடிகர் சிம்பு தெரிவித்த ஒரு விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அவர் கூறியது: “இந்த காலத்தில் ஒரு பிடித்த காட்சியை எளிதாக கட் செய்து பகிரலாம். ஆனால் அப்போது அந்த வசதி இல்லை. அஜித் நடித்த ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தில் கடைசியாக வரும் ‘என்ன சொல்லப் போகிறாய்’ நாதஸ்வர போர்ஷனை பார்த்ததற்காக, அந்தப் படத்தை நான்கு முதல் ஐந்து முறை பார்த்தேன்.” இந்த சிம்புவின் பகிர்வு, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top