Connect with us

“சதிஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘Conjuring கண்ணப்பன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவித்த படக்குழு!”

Cinema News

“சதிஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘Conjuring கண்ணப்பன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவித்த படக்குழு!”

தமிழ் திரையுலகில் பிரபல தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான AGS நிறுவனம் தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 68’ உள்பட ஒரு சில படங்களை தயாரித்து வருகிறது. இந்த நிலையில் AGS நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான திரைப்படங்களில் ஒன்று ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’.

சதீஷ் நாயகனாக நடித்த இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. மேலும் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்றது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் செய்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் டிசம்பர் 8ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. AGS நிறுவனத்தின் 24 வது படமாக உருவாகி வரும் இந்த படத்தில் சதீஷ், ரெஜினா, சரண்யா பொன்வண்ணன், ஆனந்தராஜ், VTV கணேஷ் உட்பட பலர் நடித்துள்ளனர்.

செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் உருவாகியுள்ளது. சதீஷ் தனது கனவில் நடக்கும் சம்பவங்கள் எல்லாம் நிஜ வாழ்வில் நடப்பதை அடுத்து அதை எப்படி தடுப்பது என்ற முயற்சி எடுக்கும் கதை அம்சம் கொண்ட இந்த படம் முழுக்க முழுக்க காமெடி காட்சிகள் உள்ளது என்றும் நிச்சயம் விழுந்து விழுந்து சிரிக்கும் வகையில் இந்த படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கொல்கத்தா மண்ணில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச முடிவு - பேட்டிங்கில் மிரட்டுமா கொல்கத்தா..?

More in Cinema News

To Top