Connect with us

சசிகுமாரின் ‘நந்தன்’ திரைப்படத்திற்கு கவிஞர் வைரமுத்து புகழாரம்..!!

Cinema News

சசிகுமாரின் ‘நந்தன்’ திரைப்படத்திற்கு கவிஞர் வைரமுத்து புகழாரம்..!!

சசிக்குமார் நடிப்பில் வெளியான ‘நந்தன்’ திரைப்படத்திற்கு கவிஞர் வைரமுத்து மனதார பாராட்டு தெரிவித்துள்ளார்.

சசிகுமார் நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன் திரையரங்குகளில் வெளியான திரைப்படமே நந்தன் . இப்படம் வெளியான நாள் முதல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இப்படம் OTT
தளத்தில் வெளியாகி அதிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் நந்தன் படத்தை பார்த்த கவிஞர் வைரமுத்து தற்போது நந்தன் திரைப்படத்தையும் படக்குழுவையும் மனதார பாராட்டி உள்ளார்.

சமீப காலத்தில் நான் பார்த்த சிறந்த படம் ‘நந்தன்’; நண்பர் ரஜினிகாந்துடன் பேசிக்கொண்டிருந்த போதும் ‘நந்தன்’ பற்றி விவாதித்தோம்; கொஞ்சமும் சமரசமற்ற படைப்பு ‘நந்தன்’.

சசிகுமாரிடம் வேலை வாங்கிய விதத்தில் வியக்க வைத்திருக்கிறார் இயக்குநர் ரா.சரவணன்; நல்ல படைப்பிற்கு என் நல்வாழ்த்துகள் என கவிஞர் வைரமுத்து புகழாரம் சூட்டியுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top