Connect with us

சர்தார் 2-இல் விஜய் பட இயக்குநர்? அட, இவரா!

Featured

சர்தார் 2-இல் விஜய் பட இயக்குநர்? அட, இவரா!

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் 2022ல் வெளியான “சர்தார்” திரைப்படம், கார்த்தி அப்பா, மகன் என இரட்டை கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியது. குறிப்பாக அப்பா சர்தார் கதாபாத்திரத்தில் அவர் செய்த ஆக்ஷன் காட்சிகள் பிரம்மிப்பை ஏற்படுத்தின. இந்த படத்தில் ராஷி கன்னா, ரஜிஷா விஜயன், லைலா ஆகியோர் நடித்திருந்தனர். முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியினை தொடர்ந்து, தற்போது “சர்தார் 2” உருவாகி வருகிறது.

இந்த படத்தில் கார்த்தியுடன் மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத் ஆகியோர் நடிக்கின்றனர். வில்லாதி வில்லன் நடிகர் எஸ். ஜே. சூர்யா இன்றும் இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில், இப்படத்தின் படப்பிடிப்பில் கார்த்திக்கு காயம் ஏற்பட்ட தகவலும் பரவியது.

இந்நிலையில், இப்படத்தில் இயக்குநர் தரணி இணைந்துள்ளதாம். “கில்லி”, “தூள்”, “குருவி” போன்ற பல ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர் தரணி இப்படத்தின் படப்பிடிப்பில் தன்னுடைய அனுபவத்தினால் படத்துக்கு உதவிக்கரமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. படப்பிடிப்பில் இயக்குநர் தரணி சேர்ந்த பின்பு, அந்த இடம் முழுமையாக கலக்கப்பட்டதாகவும், கார்த்தி மற்றும் படக்குழுவினர் அவரை மரியாதையுடன் பார்த்துக்கொள்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top