Connect with us

35 வருட உதவியாளருக்காக நடிகர் சரத்குமார் எடுத்த அதிரடியான முடிவு… பாராட்டும் ரசிகர்கள்!

Featured

35 வருட உதவியாளருக்காக நடிகர் சரத்குமார் எடுத்த அதிரடியான முடிவு… பாராட்டும் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரங்களில் அறிமுகமான சரத்குமார், பின்னர் ஹீரோவாக பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். தற்போது அரசியலில் முழு நேரமும் கவனம் செலுத்தி வரும் இவர், அவ்வப்போது திரைப்படங்களிலும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.

சமீபத்தில் இவர் நடித்த ‘3BHK’ திரைப்படம் வெளியானது. இதனையடுத்து, சரத்குமாரை பற்றிய ஒரு உணர்ச்சிப்பூர்வ தகவலை பிரபல இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் பகிர்ந்துள்ளார்.

அதில், “நடிகர் சரத்குமாரிடம் ஏறத்தாழ 35 ஆண்டுகளாக முத்து என்றவர் உதவியாளராக பணியாற்றி வருகிறார். அவரது மகள் ஒரு பல் மருத்துவராக பணியாற்றுகிறார். மேலும், அவரது மகன் பிரான்ஸ் நாட்டில் ஃபேஷன் டிசைன் கற்கிறார். இதற்கெல்லாம் காரணம் சரத்குமார்தான்,” என அவர் தெரிவித்தார். தன் உதவியாளரின் குழந்தைகள் கல்வியில் உயர்வடைய சரத்குமார் உதவியளித்தது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "இரண்டு படம் நடிச்சாலும், ‘பைசன்’ தான் என் முதல் படம்" – துருவ்

More in Featured

To Top