Connect with us

சந்தானத்தின் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ பட ரிலீஸில் திடீர் மாற்றம்! ஏன் தெரியுமா?!

Cinema News

சந்தானத்தின் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ பட ரிலீஸில் திடீர் மாற்றம்! ஏன் தெரியுமா?!

சந்தானம் நடித்த ’வடக்குப்பட்டி ராமசாமி’ என்ற திரைப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் திடீரென அதில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. சந்தானம் நடித்த ’வடக்குப்பட்டி ராமசாமி’ திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் அந்த நிறுவனத்தின் சார்பில் விளம்பரமும் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் திடீரென தற்போது ’வடக்குப்பட்டி ராமசாமி ’படத்தின் விளம்பரத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பெயர் இல்லை.

அதற்கு பதிலாக ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இந்த படத்தை வெளியிட இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியான நிலையில் அதில் சந்தானம் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வசனம் பேசியதாகவும் அதனால்தான் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தில் இருந்து வெளியேறி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சந்தானம், மேகா ஆகாஷ், நிழல்கள் ரவி, எம்.எஸ், பாஸ்கர், மொட்டை ராஜேந்திரன், ஜான் விஜய், ரவி மரியா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை கார்த்திக் யோகி இயக்கியுள்ளார். சீன் ரோல்டன் இசையில் தீபக் ஒளிப்பதிவில் சிவ ஆனந்தீஸ்வரன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஜூன் மாதத்தில் வெளியாகிறது தனுஷின் ‘ராயன்’ திரைப்படம் - வெளியான டக்கர் அறிவிப்பு..!!

More in Cinema News

To Top