Connect with us

“OTTயில் வெளியானது சந்தானத்தின் 80ஸ் பில்ட் அப் படம்!”

Cinema News

“OTTயில் வெளியானது சந்தானத்தின் 80ஸ் பில்ட் அப் படம்!”

கவுண்டமணியின் ஃபார்முலாவை ஃபாலோ செய்த சந்தானம் தனது டைமிங் காமெடியால் வயிறு குலுங்க ரசிகர்களை சிரிக்க வைத்தவர். இன்றுவரை அவர் நடித்த சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், சேட்டை, ஒரு கல் ஒரு கண்ணாடி என பல படங்களின் காமெடி ரசிகர்களின் ஃபேவரைட்டாக இருக்கின்றன. எவ்வளவுக்கு எவ்வளவு பயங்கரமாக சிரிக்க வைத்தாரோ அதே அளவு அவர் சர்ச்சைகளையும் சந்தித்தார்.

உதாரணமாக என்றென்றும் புன்னகை படத்தில் ஒரு பெண்ணிடம் அவர் சொல்லும் வசனம் பயங்கர விமர்சனத்தை சந்தித்தது. மேலும் அடுத்தவரை ரொம்பவே உருவ கேலி செய்கிறார் என்ற விமர்சனமும் எழுந்தது குறிப்பிடத்தக்கது. தனது கரியரின் உச்சத்தில் இருந்த சந்தானம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ர படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றது. இதனையடுத்து தொடர்ந்து ஹீரோவாகவே நடித்துவருகிறார் அவர்.

அந்தவகையில் அவர் நடித்த இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு, டகால்டி, ஏ1 என வரிசையாக நடித்துவருகிறார். தன்னுடைய பலமான காமெடியை மையமாக வைத்து உருவாக்கப்படும் கதைகளையே தேர்ந்தெடுத்து ஹீரோவாக நடித்துவருகிறார். அப்படி அவர் நடித்த டிக்கிலோனா படம் ஓரளவு வரவேற்பைப் பெற்றது. இருந்தாலும் பெரிய ஹிட் ஒன்றுக்காக காத்திருந்தார் சந்தானம். அந்தவகையில் அவர் நடித்த டிடி ரிட்டர்ன்ஸ் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

ஹாரர் காமெடி ஜானரில் உருவாகியிருந்த அந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல ரெஸ்பான்ஸை பெற்றது. ஆனால் அடுத்ததாக வெளியான கிக் படம் அவர் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் சந்தானம் கொஞ்சம் அப்செட் ஆனதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் அவர் கடைசியாக 80ஸ் பில்ட் அப் படம் வெளியானது. படத்தை கல்யாண் இயக்க சந்தானத்துடன் ராதிகா ப்ரீத்தி, ஆர்.சுந்தர்ராஜன், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சூரி நடிப்பில் உருவான கருடன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

More in Cinema News

To Top