Connect with us

மூன்று நாட்களில் 80s Buildup செய்த வசூல்..சந்தானத்திற்கு மீண்டும் ஒரு தோல்வி படம்!

Cinema News

மூன்று நாட்களில் 80s Buildup செய்த வசூல்..சந்தானத்திற்கு மீண்டும் ஒரு தோல்வி படம்!

நடிகர் சந்தானம் நடிப்பில் கல்யாண் இயக்கத்தில் உருவாகி திரையரங்கில் வெளிவந்துள்ள திரைப்படம் 80ஸ் பில்டப்…இப்படம் வந்தது முதல் சுமார் என எல்லாமே கலவை விமர்சனங்களை சந்தித்து வருகின்றது..இது டக்கர் படத்தை தொடர்ந்து Flop படமாகும்…

இப்படத்தில் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார், சுந்தர் ராஜன், ஆனந்த்ராஜ், மொட்டை ராஜேந்திரன், முனினீஸ்காந்த் மற்றும் ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்…பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த படம் மக்களை பெரிதாக கவரவில்லை என்றும் சொல்லலாம்…

படத்தின் கதை படி பார்த்தால் ஜெமின் பரம்பரையை சேர்ந்த சந்தானத்தின் தாத்தா சுந்தர் ராஜன் ஒரு கட்டத்தில் கல்கண்டு என நினைத்து வைரக்கல்லை சாப்பிட்டு இறந்து போகிறார்…இது அவர்களுக்கு ஒரு ஷாக்கை கொடுக்கிறது அப்படி தான் கதை ஆரம்பம் ஆகிறது..அதிலும் நகைச்சுவையை கொடுக்க பல சம்பவங்களை செய்தும் இருந்தனர்…

ஜெமின் வீடு சாவு வீடாக மாற அவருடைய உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த சொந்தக்காரர்கள் அனைவரும் வருகிறார்கள்…அதில் கதாநாயகியும் எண்ட்ரி கொடுக்கிறார்…அங்கு ஒரு காதல் கதை அதனால் நடக்கும் சம்பவங்களே இந்த படத்தின் கதையாக இருக்கின்றது…பெரிதும் சுவாரசியம் மற்றும் சிரிப்பு என இல்லாததனால் படம் எடுபடவில்லை…

இந்நிலையில் வசூல் விவரம் வந்து இருக்கின்றது மூன்று நாட்கள் முடிவில் ரூ.3.21 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது.பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் மொத்தமாக வசூலும் இல்லாமல் கூட்டமும் இல்லாமல் காலியான திரையரங்கமாக இருந்து வருகின்றது..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பகத் பாசிலின் 'ஆவேசம்' திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

More in Cinema News

To Top