Connect with us

ஆல்யா மானசா – சஞ்சீவ் கார் கலெக்‌ஷன்: எத்தனை கார்கள் இவர்களிடம் உள்ளன?

Featured

ஆல்யா மானசா – சஞ்சீவ் கார் கலெக்‌ஷன்: எத்தனை கார்கள் இவர்களிடம் உள்ளன?

சின்னத்திரை நட்சத்திர ஜோடியாக வலம் வருபவர்கள் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா. ‘ராஜா’ சீரியலில் இணைந்து நடித்த போது இருவருக்கும் இடையே காதல் மலர, பின்னர் திருமணமாகியது. இப்போது இவர்கள் இருவருக்கும் ஐலா சையத் என்ற மகள் மற்றும் அர்ஷ் சையத் என்ற மகன் உள்ளனர். தற்போது சஞ்சீவ் ‘கயல்’ சீரியலில் கதாநாயகனாக பிசியாக நடித்து வருகிறார். ஆல்யா மானசா, ‘இனியா’ சீரியலில் நடித்து வந்தார். அந்த சீரியல் கடந்த ஆண்டு முடிவடைந்தது. தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதிய சீரியலில் நடித்து வருகிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நட்சத்திர ஜோடியாக வலம் வருகிற இவர்கள், சமீபகாலமாக தொடர்ந்து பல்வேறு கார்களை வாங்கி வருவது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருகிறது. சஞ்சீவ் மற்றும் ஆல்யா இருவருமே கார் ஆர்வலர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் முதன்முதலில் வைத்திருந்த கார் மாருதி ஆல்டோ. திருமணத்திற்கு பிறகு குடும்பத்துடன் பயணிக்க வசதியான கார் தேவைப்பட்டதால், ‘கியா கேரன்ஸ்’ காரை வாங்கியுள்ளனர்.

அதன்பின், ஆல்யா மானசா குழந்தை பெற்ற பின் உடல் எடையில் ஏற்பட்ட மாற்றத்தைக் கட்டுப்படுத்தி, ஆறு மாதத்தில் மீண்டும் குறைத்தார். அதனை பாராட்டி, சஞ்சீவ் அவருடைய பிறந்தநாளில் ‘மினி கூப்பர்’ என்ற சொகுசு காரை பரிசாக வழங்கினார். இதற்குப் பதிலாக, சஞ்சீவின் பிறந்தநாளில் ஆல்யா மானசா ‘மஹிந்திரா தார்’ காரை பரிசாக வாங்கிக் கொடுத்துள்ளார்.

இவை தவிர, இவர்களிடம் ‘மெர்சிடிஸ் பென்ஸ் E-Class’ என்ற ஆடம்பர கார் உள்ளது. இந்த காரை வாங்குவது இருவரும் கொண்டிருந்த கனவாக இருந்தது. அந்த கனவு கடந்த ஆண்டில் நிறைவேறியது. இந்த காரின் சந்தை மதிப்பு ரூ.80 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. இந்த காரை வாங்கும் முன், ஏற்கனவே வைத்திருந்த ‘மினி கூப்பர்’ மற்றும் ‘மஹிந்திரா தார்’ கார்களை விற்றுத் தான் ‘பென்ஸ்’ காரை வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "இரண்டு படம் நடிச்சாலும், ‘பைசன்’ தான் என் முதல் படம்" – துருவ்

More in Featured

To Top