Connect with us

காத்திருக்க சொன்ன சலூன் கடை உரிமையாளர் – கொடூரமாக கொலை செய்த கஸ்டமர்..!!

Featured

காத்திருக்க சொன்ன சலூன் கடை உரிமையாளர் – கொடூரமாக கொலை செய்த கஸ்டமர்..!!

டெல்லியில் முடிவெட்ட சிறிது நேரம் காத்திருக்கும்படி சொன்ன சலூன் கடை உரிமையாளர் கஸ்டமரால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

டெல்லி சமய்பூர் பகுதியில் உள்ள சலூன் கடைக்கு வந்த வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விரைந்து முடிவெட்டுமாறு கடை உரிமையாளரிடம் கேட்டுள்ளனர் . கடையில் கூட்டம் அதிகமாக இருந்ததால் சிறிது நேரம் காத்திருக்கும்படி கஸ்டமர்களிடம் கடை உரிமையாளர் கூறியுள்ளார்.

இதனால் கோபமடைந்த வாடிக்கையாளர்கள் கடை உரிமையாளரிடம் முதலில் வாய்த்தகராறில் ஈடுபட்டுள்ளனர் . இந்த நிலையில் இவர்களுக்குள் வாக்குவாதம் முற்றிப்போக அந்த நபர்கள் கடை உரிமையாளரை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளனர் .

5 இடங்களில் காயம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கடை உரிமையாளர் இன்று உயிரிழந்துள்ள நிலையில் இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டுள்ளவர்களை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top