Connect with us

சும்மா கெத்தா மாஸா…NETFLIX OTT தளத்தில் நாளை வெளியாகிறது சலார் படம்..!!

Cinema News

சும்மா கெத்தா மாஸா…NETFLIX OTT தளத்தில் நாளை வெளியாகிறது சலார் படம்..!!

பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் மற்றும் பிருத்விராஜ் நடிப்பில் வெளியினான சலார் படம் நாளை NETFLIX OTT தளத்தில் வெளியாகி உள்ளது.

கே.ஜி.எப்.என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கி ஒட்டு மொத்த தரையுலகையே திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குநர் பிரசாந்த் நீல் . இவரின் அடுத்த படத்திற்காக அனைவரும் வெறித்தனமாக காத்திருந்த நேரத்தில் சலார் என்ற மாஸ் பட்ஜெட் படத்தை மாபெரும் நட்சத்திர பட்டாளத்தை வைத்து இயக்கியுள்ளார் .

கே.ஜி.எப் படத்தை தயாரித்த ஹம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் மாபெரும் பொருட் செலவில் தயாரிக்கப்பட்ட இப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் கோலாகலமாக வெளியானது.

பிரபாஸ் – பிரசாந்த் நீல் – பிருத்விராஜ் என முப்பெரும் காம்போவில் உருவான இப்படத்திற்கு ஆரம்பம் முதல் கலவையான விமர்சனங்கள் கிடைத்து வந்தாலும் , வசூலில் பட்டைய கிளப்பியது .

தமிழ் உள்பட பல மொழிகளில் வெளியான இப்படம் கே.ஜி.எப். படம் அளவிற்கு ஓடவில்லை என்றாலும் அணைத்து இடங்களிலும் ஓரளவு டீசண்டாக ஓடியது .

இந்நிலையில் இப்படத்தை OTT யில் பார்க்க நினைத்த அனைவர்க்கும் தற்போது படக்குழுவிடம் இருந்து குட் நியூஸ் ஒன்று வந்துள்ளது.

அதன்படி பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் மற்றும் பிருத்விராஜ் நடிப்பில் வெளியினான சலார் படம் நாளை NETFLIX OTT தளத்தில் வெளியாகி உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  திரையரங்குகளில் வெற்றிநடை போடும் கவினின் ஸ்டார் - முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா..?

More in Cinema News

To Top