Connect with us

பொறுப்புடன் ஆடிய சாய் சுதர்சன் – மும்பை அணிக்கு 169 ரன்கள் இலக்கு..!!

Featured

பொறுப்புடன் ஆடிய சாய் சுதர்சன் – மும்பை அணிக்கு 169 ரன்கள் இலக்கு..!!

நடப்பாண்டுக்கான IPL தொடரில் இன்று நடைபெறும் மும்பை மற்றும் குஜராத் அணிகளுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி மும்பை அணிக்கு 169 ரன்களை இலக்காக வைத்துள்ளது.

2024 ஐபிஎல் தொடரின் 5-வது போட்டியான இன்று மும்பை மற்றும் குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகிறது . அஹமதாபாத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது .

இதையடுத்து மும்பை அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக சாஹாவும், கில்லும் களமிறங்கினர்.

எப்போதும், போல் சிறப்பாக ஆட்டத்தை தொடங்கிய இருவரும் அணிக்கு தேவையான ஸ்கோரை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த விருத்திமான் சாஹா பும்ராவின் பந்தில் விக்கெட்டை பறிகொடுக்க அவரை தொடர்ந்து வந்த வீரர்கள் நிலைத்து ஆடாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்கள்.

குஜராத் அணியில் தமிழக வீரரான சாய் சுதர்சன் மட்டும் பொறுப்புடன் நிலைத்து ஆடி வந்த நிலையில் அவரும் பும்ராவின் அபார பந்து வீச்சால் 45 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார் .

இறுதியில் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த குஜராத் அணி 168 ரன்கள் எடுத்து . இதையடுத்து 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி விளையாடி வருகிறது.

இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வெல்ல போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கோட் படத்தின் Sneak Peek வீடியோ வெளியானது..!!

More in Featured

To Top