Connect with us

சாய் பல்லவி பற்றி பரவிய வதந்தி: கடுமையான கோபத்தில் கொடுத்த பதிலடி..

Featured

சாய் பல்லவி பற்றி பரவிய வதந்தி: கடுமையான கோபத்தில் கொடுத்த பதிலடி..

சாய் பல்லவி, தற்போது ஹிந்தி சினிமாவில் ‘ராமாயணம்’ படத்தில் சீதை ரோலில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரன்பீர் கபூர் ராமர் ரோலில் நடிக்கிறார். படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் சில புகைப்படங்கள் வெளியாகி இருந்தன. சமீபத்தில், சாய் பல்லவியை பற்றிய சில பொய்யான தகவல்கள் சமூக ஊடகங்களில் பரவின.

அந்த தகவல்கள், சாய் பல்லவி சீதை ரோலில் நடிக்க அவர் சைவமாக மாறியிருப்பதாகவும், வெளியில் ஹோட்டல்களில் கூட அவர் சாப்பிடுவதில்லை என்று கூறப்பட்டது. இந்த தகவல்களை மறுத்து, சாய் பல்லவி கடுமையாக பதிலளித்துள்ளார்.

அந்த பதிலில், “என்னை பற்றி இப்படி பொய்யான தகவல்கள் வரும்போது நான் பலமுறை, கிட்டத்தட்ட எல்லா முறையும், அமைதியாக தான் இருந்திருக்கிறேன். இதை அவர்கள் உள்நோக்கத்துடன் செய்கிறார்களா என்பது கடவுளுக்கு தான் தெரியும்,” என்றார்.

மேலும், “இது தொடர்கதையாகிவிட்டது, நிற்பது போல தெரியவில்லை என்பதால் நான் இதற்கு பதில் அளிக்க இது தான் நேரம்,” எனவும், “என் படங்கள் ரிலீஸ், அறிவிப்புகள் வரும்போது, என் கெரியரில் முக்கிய நேரங்களில் இப்படிப்பட்ட வதந்திகள் வருகிறது,” என்றும் கூறினார்.

சாய் பல்லவி, இதன் மூலம் இந்த பொய்யான செய்திகளை எதிர்த்து தன்னை சட்டப்படி கையாள்வதாகத் தெரிவித்தார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top