Connect with us

நள்ளிரவில் நடிகை சோனா வீட்டில் நடந்த பயங்கரம் – வெளியான ஷாக்கிங் தகவல்..!!

Cinema News

நள்ளிரவில் நடிகை சோனா வீட்டில் நடந்த பயங்கரம் – வெளியான ஷாக்கிங் தகவல்..!!

தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை சோனா . இவர் தற்போது திரைப்படங்களில் நடிப்பதை விடுத்து தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் மதுரவாயலில் உள்ள தனது வீட்டிற்குள் மர்ம நபர்கள் சிலர் கத்தியுடன் புகுந்து கொள்ளையடிக்க முயன்றதாக நடிகை சோனா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

நேற்றிரவு மர்ம நபர்கள் இருவர் தனது வீட்டின் காம்பவுண்ட் சுவரை ஏறிக் குதித்து, வீட்டின் வெளிப்புறம் பொருத்தப்பட்டுள்ள ஏசி யூனிட்டை திருட முயற்சித்துள்ளனர். அப்போது, நாங்கள் வளர்க்கும் நாய் அவர்களைப் பார்த்து குரைக்கவே, சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தோம்.

இதையடுத்து எங்களை பார்த்ததும் இரண்டு கொள்ளையர்களும் மறைத்து வைத்திருந்த கத்தியைக் காட்டி மிரட்டினர் . இதையடுத்து நங்கள் கூச்சலிட்டதும் எங்களை விட்டு அவர்கள் தப்பி சென்றுவிட்டதாக சோனா தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மதுரவாயல் போலீசார், வீட்டின் அருகே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி கொள்ளையர்கள் குறித்த அடையாளங்களை சேகரித்து அவர்களை தேடும் பணியில் இறங்கி உள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  விபத்தில் சிக்கிய விஜய் தேவரகொண்டா – மருத்துவர்கள் அளித்த அப்டேட்!

More in Cinema News

To Top