Connect with us

ராக்ஸ்டார் அனிருத் Turns 35! செல்வச்சொத்து என்ன தெரியுமா?

aniruth

Cinema News

ராக்ஸ்டார் அனிருத் Turns 35! செல்வச்சொத்து என்ன தெரியுமா?

Aniruth: அனிருத் தனது இசை பயணத்தை 2011 ஆம் ஆண்டு துவங்கி, 2012 ஆம் ஆண்டு வெளியான ‘3’ திரைப்படத்தின் “Why This Kolaveri Di” பாடலின் மூலம் பிரபலமானார். அவர் கைதி, மாஸ்டர், பீஸ்ட், லியோ போன்ற பல வெற்றிப் படங்களில் இசையமைத்துள்ளார். தற்போது, கூலி, மதராசி, ‘ ஜனநாயகன், கிங் போன்ற எதிர்காலத் திட்டங்களில் பணியாற்றி வருகிறார்.

aniruth (1)
aniruth (1)

சினிமாவிற்குள் சூப்பர் ஸ்டார் ரஜினியின் உறவினர் என்ற அடையாளத்துடன் வந்திருந்தாலும் அவருடைய திறமையால் மட்டுமே தற்போது வளர்ந்து நின்று இருக்கிறார். அதனால் தான் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி தெலுங்கு போன்ற மற்ற மொழிகளிலும் இவர் இசை மூலம் வெற்றி பெற்று வருகிறார்.

ராக் ஸ்டார் அனிருத் என்ற பட்டத்துடன் வலம் வரும் இவர் இன்று 35 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவர் இசையமைத்தாலே அந்தப் பாடலும் சரி படமும் வெற்றி பெற்று விடும் மக்களை ஈசியாக ரீச் ஆகி விடும் என்ற ஒரு நம்பிக்கை அனைவரிடமும் கொடுத்துவிட்டார். அது நாளைக்கு இவருடைய மார்க்கெட் ரேட் ஒவ்வொரு படத்துக்கும் கூடிக் கொண்டே வருகிறது.

அந்த வகையில் ஒரு படத்துக்கு பத்து கோடி வரை சம்பளம் பெற்று வருகிறார். அதே நேரத்தில் மற்ற இசையமைப்பாளர்கள் இசையமைத்து கொடுத்தால் அந்த பாடலுக்கு பணம் வாங்காமலேயே பாடி கொடுத்திருக்கிறார். அப்படிப்பட்டவரின் சொத்து மதிப்பு என்னவென்று தற்போது தகவல் வெளியாகிறது.

அதாவது அனிருத் தனது சொந்த வீட்டை சென்னை நகரில் வைத்திருக்கிறார். அவரது கார் சேகரிப்பில் Porsche Macan, BMW iX, BMW X5, Ford Mustang போன்ற பிரபலமான வாகனங்கள் அடங்கும். அத்துடன் மொத்தமாக கிட்டத்தட்ட 70 கோடி வரை சொத்து சேர்த்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து கான்செர்ட், ஹோட்டல் தொழில் என பல வகையிலும் சம்பாதித்து வருகிறார்.

அனிருத் தனது இசையால் தமிழ் சினிமாவின் இசை உலகில் முக்கியமான இடத்தை பிடித்துள்ளார். அவரின் இசை மற்றும் வாழ்க்கை முறை, இளைய தலைமுறையினருக்கு ஒரு ஊக்கமாக இருக்கிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஜாய் கிரிஸில்க்கு போட்டியாக முதல் மனைவியை கூட்டிட்டு வந்த ரங்கராஜ்

More in Cinema News

To Top