Connect with us

RJ பாலாஜி நடிப்பில் வெளியான ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தின் முதல் நாள் வசூல் Collection இவ்வளவா?!

Cinema News

RJ பாலாஜி நடிப்பில் வெளியான ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தின் முதல் நாள் வசூல் Collection இவ்வளவா?!

RJ பாலாஜி, நடிகை மீனாட்சி செளத்ரி நடித்த சிங்கப்பூர் சலூன் திரைப்படம் நேற்று ஜனவரி 25ஆம் தேதி வெளியானது. இந்தப் படத்தை “இதற்குத்தானாய் ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ரெளத்திரம்” ஆகியப் படங்களை இயக்கிய கோகுல் இயக்கியுள்ளார். அறிக்கையின்படி, சிங்கப்பூர் சலூன் திரைப்படம் ரிலீஸான முதல் நாளில் இந்தியாவில் ரூ. 1 கோடி சம்பாதித்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல் 2ஆவது நாளான இன்றைய நண்பகல் ஒரு மணி நிலவரப்படி, 0.38 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. RJ பாலாஜியின் சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தை முதல் நாளில், திரையரங்குகளில் 19.26 விழுக்காடு தமிழர்கள் பார்த்து ரசித்துள்ளனர். அதிகபட்சமாக பாண்டிச்சேரியில் 42.5 விழுக்காடு பார்வையாளர்கள் இப்படத்தைப் பார்த்துள்ளனர்.

காலை காட்சிகளில் 13.24 விழுக்காடும், நண்பகல், மாலை மற்றும் இரவு காட்சிகளில் முறையே 18.54 விழுக்காடு, 18.38 விழுக்காடு மற்றும் 26.89 விழுக்காடு பார்வையாளர்கள் இருந்தனர். சிங்கப்பூர் சலூன் ஒரு இளம் சிகை அலங்கார நிபுணரைப் பற்றிய வெற்றிக்கதை ஆகும். தனது கிராமத்தில் ஒரு முடிதிருத்துபவரால் ஈர்க்கப்பட்டு, நிறைய கனவுகளைக் கொண்டிருக்கும் இளைஞர் சிகை அலங்கார ஜெயித்தாரா என்பதை இப்படம் கூறுவதாகத் தெரிகிறது.

இந்தப் படத்தில் RJ பாலாஜி, மீனாட்சி சவுத்ரி, சத்யராஜ், லால், கிஷன் தாஸ், ஆன் ஷீத்தல், தலைவாசல் விஜய், ஜான் விஜய், ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதற்கிடையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் ஜீவா ஆகியோர், இப்படத்தில் சிறப்புத் தோற்றங்களில் தோன்றியுள்ளனர். படம் நவம்பர் 2022-ல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வந்த ‘ரிவால்வர் ரீட்டா’ படப்பிடிப்பு நிறைவு..!!

More in Cinema News

To Top