Connect with us

ஆர் ஜே பாலாஜி: அயோத்தி வாய்ப்பை மிஸ் செய்த வருத்தம்..

Featured

ஆர் ஜே பாலாஜி: அயோத்தி வாய்ப்பை மிஸ் செய்த வருத்தம்..

ஆர் ஜே பாலாஜி, தனது திரைப்பட பயணத்தை சிறு வேடங்களில் தொடங்கி, இன்று பிரபல நடிகரும் இயக்குனராகவும் திறமையை நிரூபித்துள்ளார்.
சினிமா பயணம்

2019ஆம் ஆண்டு வெளியான “LKG” படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் வெற்றியைத் தொடர்ந்து, “மூக்குத்தி அம்மன்” என்ற படத்தை நடிகை நயன்தாராவுடன் இயக்கியும் நடித்தும் வெற்றிகரமாக முடித்தார்.இப்போது, அவரது புதிய படம் “சொர்க்கவாசல்” வெளியாக தயாராகியுள்ளது, இதன் பிரமோஷனில் அவர் பிஸியாக இருக்கிறார்.

ஒரு நிகழ்ச்சியில் ஆர் ஜே பாலாஜி, ஒரு பெரிய வாய்ப்பை தவறவிட்டதைப் பற்றி பேசியது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. “அயோத்தி” படத்தில் முதலில் அவரை அணுகியதாகவும், ஆனால் சில காரணங்களால் அந்த வாய்ப்பை இழந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு, ரஜினிகாந்த் படக்குழுவினரை பாராட்டியதை நினைத்துப் பார்த்தாலே மிகவும் வருத்தமாக இருக்கிறது என அவர் தெரிவித்தார்.

ஆர் ஜே பாலாஜி தனது பணி மற்றும் புதிய முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். “சொர்க்கவாசல்” படத்தின் வெற்றிக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ஆர் ஜே பாலாஜி தனது குரல் சேவையிலிருந்து காமெடி நடிப்புக்கும், இயக்கத்துக்கும் தன்னிகரற்ற பயணத்தை உருவாக்கியுள்ளார், இது தமிழ் திரைத்துறையில் சிறந்த உதாரணமாக பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

Continue Reading
Advertisement
You may also like...

More in Featured

To Top