Connect with us

ரிஷப் பண்ட் ரிட்டயர்டு ஹர்ட் – இந்திய ‘ஏ’ அணிக்கு பெரிய பின்னடைவு!

Sports

ரிஷப் பண்ட் ரிட்டயர்டு ஹர்ட் – இந்திய ‘ஏ’ அணிக்கு பெரிய பின்னடைவு!

பெங்களூரு:
இந்தியா ‘ஏ’ அணி மற்றும் தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய ‘ஏ’ அணி 77.1 ஓவர்களில் 255 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. துருவ் ஜுரேல் அசத்தலாக 132 ரன்கள் விளாசினார். தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்சில் 221 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. இந்திய தரப்பில் பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டும், முகமது சிராஜ் மற்றும் ஆகாஷ் தீப் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

34 ரன் முன்னிலை பெற்ற இந்தியா, 2-வது இன்னிங்சை தொடங்கி 3 விக்கெட்டுக்கு 78 ரன்களில் இருந்தது. கே.எல். ராகுல் (26) மற்றும் குல்தீப் யாதவ் களத்தில் இருந்தனர். மூன்றாவது நாள் ஆட்டத்தில் ராகுல் விரைவில் ஆட்டமிழந்தார்.

அப்போது கேப்டனாக ரிஷப் பண்ட் களமிறங்கினார். தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய அவர், முதலில் ஹெல்மெட்டில் பந்து தாக்கியும் தைரியமாக பேட்டிங்கைத் தொடர்ந்தார். பின்னர் ஒரு பவுன்சர் அவரது மணிக்கட்டில் பலமாகப் பட்டது. கடும் வலியால் பாதிக்கப்பட்ட ரிஷப் பண்ட், தொடர்ந்து விளையாட முடியாமல் “ரிட்டயர்டு ஹர்ட்” ஆனார்.

அவருக்குப் பதிலாக துருவ் ஜுரேல் களமிறங்கினார். பண்ட் மீண்டும் பேட்டிங் செய்ய வருவாரா என்பது இன்னும் தெரியவில்லை. இது இந்திய ‘ஏ’ அணிக்கு பெரிய பின்னடைவாகும்.

முன்னதாக இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் காயமடைந்த பண்ட், மூன்று மாத இடைவெளிக்குப் பிறகு இந்த தொடரில் மீண்டும் களமிறங்கியிருந்தார். தற்போது மீண்டும் காயம் அடைந்ததால் வரும் நவம்பர் 14 முதல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தொடங்கும் முதல் டெஸ்ட் ஆட்டத்தில் விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சூர்யகுமார் யாதவ் கருத்துக்கு பாக் வீரர் ஆதரவு

More in Sports

To Top