Connect with us

“பாலிவுட்டில் கேமராமேனாக பணியாற்றுவதை சில நேரம் தவிர்க்கிறேன். – நட்ராஜ்; காரணம் என்ன?”

Cinema News

“பாலிவுட்டில் கேமராமேனாக பணியாற்றுவதை சில நேரம் தவிர்க்கிறேன். – நட்ராஜ்; காரணம் என்ன?”

சென்னை: சமீபத்தில் சர்ச்சைக்குள்ளான அண்ணா பல்கலைக்கழக பாலியல் விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகிய ‘ரைட்’ திரைப்படம் செப்டம்பர் 26-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

சுப்ரமணியன் ரமேஷ்குமார் இயக்கத்தில் உருவாகிய இப்படத்தில் நட்ராஜ் (நட்டி), அருண் பாண்டியன் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். நடிகை அனுபமா குமாரின் மகன் ஆதித்யா ஷிவக், மற்றும் யுவினா பார்கவி கல்லூரி மாணவியாக கதாபாத்திரங்களில் இணைந்துள்ளனர். இதோடு, ‘பிக் பாஸ்’ அக்‌ஷரா ரெட்டி, வினோதினி உள்ளிட்ட பலர் கூட நடித்துள்ளனர்.

அருண் பாண்டியன், கோ-டைரக்டராகவும் சில பணிகளில் ஈடுபட்டுள்ளார். “சமூக அக்கறை மிக்க கதையை இயக்குநர் சொல்லி இருக்கிறார்” என்றும் அவர் தெரிவித்தார்.

இதன் பிறகு செய்தியாளர் கேள்வி எழுப்பினார்: “பாலிவுட்டில் உங்களை கேமராமேனாக பணியாற்ற அழைக்கிறார்கள். ஆனால் நீங்கள் நடிப்பையே முக்கியமாகக் கருதி தமிழ்நாட்டில் இருக்கிறீர்கள். பெரிய படங்களில் மீண்டும் கேமராமேனாக பணியாற்றுவீர்களா?”

இதற்கு நட்டி பதிலளித்தார்: நல்ல கதை, பெரிய நடிகர்கள் இருந்தால் நிச்சயமாக பணியாற்றுவேன். கேட்கிற எக்கியூப்மென்ட் எல்லாம் அங்குத் தருவார்கள், எனது தொழிலை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பும் கிடைக்கும். இப்போதும் இடைவேளை கிடைத்தால் அங்குச் சென்று பணியாற்றிக்கொண்டு இருக்கிறேன்.

ஆனால் ஒளிப்பதிவாளராக ‘Feature film’-களில் மட்டுமே பணியாற்றுவதை தவிர்க்கிறேன். அதற்குக் குறைந்தது 1.5 வருடம் ஒதுக்க வேண்டும். அதனால் சில படங்களில், குறிப்பாக கதைகள் சரியாக வருமா என்று சந்தேகம் இருந்தால், பாலிவுட்டில் கேமராமேனாக பணியாற்றுவதை தவிர்க்கிறேன்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  STR 49 வெற்றிமாறன்–சிம்பு புதிய படம்: டைட்டில் ரிவீல்!

More in Cinema News

To Top