Connect with us

ரெட்ரோ திரை விமர்சனம…

Featured

ரெட்ரோ திரை விமர்சனம…

சூர்யா, பல வருடங்களாக ஒரு பிளாக்பஸ்டர் ஹிட்டிற்காக காத்திருந்த நிலையில், ரெட்ரோ படம் மூலம் மீண்டும் திரும்ப வர முயற்சி செய்துள்ளார். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் உடன் கைக்கோர்க்கும் இந்த முயற்சி, எவ்வளவு வெற்றி பெற்றதென பார்ப்போம்.

படத்தின் தொடக்கத்திலேயே தந்தையை இழக்கும் சூர்யா, பின்னர் ஒரு கோடிக்கார குடும்பத்தில் வளர்கிறார். ஆனால் அந்த குடும்பமே அவனை ஒரு குற்றவாளியாக மாற்றுகிறது. அடியாள் வாழ்க்கையில் சிக்கிய சூர்யா, பூஜாவை காதலிக்கிறான். காதலுக்காக குற்றங்களை விட்டு வர விரும்புகிறான்.

ஆனால் அந்த வீட்டுத்தந்தை அவனிடம் கேட்ட கடைசி ஒரு வேலையை மறுத்ததால், பூஜாவின் உயிர் ஆபத்தில் போகிறது. இதனால் சூர்யா ஒரு கடுமையான முடிவெடுக்க நேரிடுகிறது. இதன் பின்னணி சிறை, பிரிவு, பின்னர் அந்தமானில் காதலை தேடும் பயணம். இதை ஒரு கிருஷ்ணர் கதையின் reimagination போல கார்த்திக் சுப்புராஜ் கொண்டு வந்திருக்கிறார். படத்தில் சிம்பாலிக் மெட்டபர்களும், காதல், கல்ட், தம்மம் என ஆறு பகுதிகளாக கதையை கட்டியுள்ளார்.

சூர்யா ஒரு நடிகராக மாஸ் கம்பேக் கொடுத்திருக்கிறார். திருமண மண்டபத்தில் வரும் single shot காட்சி வசூலை இழுக்கும் வகையில் உள்ளது. பூஜாவும் சரியாகவே செய்துள்ளார்.ஜோஜு ஜார்ஜ் அதிரடி நடிப்பு கொடுத்திருக்கிறார். “அன்பு மனவே டாடி இஸ் கமிங்டா” என்ற காட்சி ரசிகர்களை கவரும். ஆனால் நாசர், பிரகாஷ்ராஜ் போன்றோர் வெறும் cameos மாதிரி.

படத்தின் இரண்டாம் பாதியில் சுவாரஸ்யம் குறைவாகவே உணரப்படுகிறது. ஒரே கட்டத்தில் இது ‘ஆயிரத்தில் ஒருவன்’ போல மாறுகிறதா என கூட தோன்றுகிறது. டெக்னிக்கலா படம் மிக வலுவானது. ஒளிப்பதிவு, அந்தமான் காட்சிகள், சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை – எல்லாம் next level. மொத்தத்தில், ரெட்ரோ ஒரு நடிகராக சூர்யாவிற்கு comeback கொடுத்தாலும், ஒரு Director-Actor combo ஆக சூர்யா-கார்த்திக் சுப்புராஜ் ஜோடி கொஞ்சம் தடுமாறியது தான்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top