Connect with us

ரெட்ரோ 4 நாட்களில் உலகளவில் எவ்வளவு வசூல் செய்திருக்கிறது தெரியுமா?

Featured

ரெட்ரோ 4 நாட்களில் உலகளவில் எவ்வளவு வசூல் செய்திருக்கிறது தெரியுமா?

சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ரெட்ரோ. இந்தப் படத்தை இயக்கியுள்ளார் முன்னணி இயக்குநரான கார்த்திக் சுப்புராஜ்.

படத்தில் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், நாசர், ஜெயராம், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் பணியாற்றியுள்ளார். இந்த படத்திற்கு விமர்சனங்கள் கலவையாக வந்துள்ளன. அதையும் பொருட்படுத்தாமல், வசூலில் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மே 1ம் தேதி வெளியான இந்த படம், முதல் நான்கு நாட்களில் உலகளவில் ரூ. 80 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வசூலில் இந்த வேகம் தொடர்ந்து வருமா என்பதைக் காண நாம் எதிர்பார்த்து இருக்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  Autograph மீண்டும் ஹிட் – OTT வரவேற்பால் நெகிழும் சேரன்

More in Featured

To Top