Connect with us

பைசன் வெளியான 5 நாட்களில் உலகளவில் வசூல் செய்துள்ள ரிப்போர்ட்

bison

Cinema News

பைசன் வெளியான 5 நாட்களில் உலகளவில் வசூல் செய்துள்ள ரிப்போர்ட்

Bison Collection: இளம் ஹீரோ துருவ் விக்ரம் நடித்திருக்கும் ‘பைசன்’ திரைப்படம், கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானதும், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று, வலிமையான பாக்ஸ் ஆபிஸ் ஓப்பனிங்கை பெற்றுள்ளது.

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்த சமூக நோக்குடைய திரைப்படத்தில், லால், பசுபதி, அமீர், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

bison
bison

படம், தமிழக கபடி வீரர் மணத்தி கணேசன் அவர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. சமூக விழிப்புணர்வும், களமாடும் வீர வாழ்க்கையையும் நுணுக்கமாகச் சொல்லும் இந்தப் படம், விமர்சன ரீதியாக கலவையான அபிப்பிராயங்களை சந்தித்தாலும், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தற்போதைய பாக்ஸ் ஆபிஸ் நிலை:

தயாரிப்பு நிறுவனத்தினரிடமிருந்து வெளியாகிய தகவலின்படி, பைசன் படம் உலகளவில் 5 நாட்களில் ரூ. 37 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இன்னும் பல நாடுகள் மற்றும் திரையரங்குகளில் படம் ஓடிக் கொண்டிருப்பதால், இது இன்னும் உயர வாய்ப்பு உள்ளதாக Box Office வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  லாஜிக்கே இல்லாமல் சொதப்பும் டீசல், ஹரிஷ் கல்யாணனின் நிலைமை என்ன?

More in Cinema News

To Top