Connect with us

‘REMO’ பட இயக்குனரின் அடுத்த படத்தில் இவர்தான் ஹீரோவா?! வெளியான Latest தகவல்!

Cinema News

‘REMO’ பட இயக்குனரின் அடுத்த படத்தில் இவர்தான் ஹீரோவா?! வெளியான Latest தகவல்!

சிவகார்த்திகேயன் நடித்த ’ரெமோ’ திரைப்படம் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியானது என்பதும் சுமார் 35 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் 52 கோடி ரூபாய் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் அதன் பிறகு கார்த்தி நடித்த ’சுல்தான்’ என்ற படத்தை இயக்கினார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. இந்நிலையில் தற்போது அவரது இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த திரைப்படம் குறித்த தகவல் கசிந்துள்ளது.

இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் SJ சூர்யா நாயகனாக நடிக்க இருப்பதாகவும் இது முழுக்க முழுக்க ஒரு காமெடி திரைக்கதை அம்சம் கொண்டது என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என தெரிகிறது.

’இந்தியன் 2’, ‘கேம் சேஞ்சர்’, ‘D50’, ‘லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேசன்’ போன்ற படங்களில் வில்லனாக SJ சூர்யா நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் அவர் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். கடந்த 2000ஆம் ஆண்டுகளில் ஏற்கனவே அவர் ஹீரோவாக பல படங்களில் நடித்த நிலையில் நீண்ட இடைவேளைக்கு பின்னர் மீண்டும் ஹீரோவாக நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  12 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவச்செல்வங்களே விரைவில் சந்திப்போம் - விஜய்யின் அறிவிப்பால் உற்சாகத்தில் மாணவர்கள்..!!

More in Cinema News

To Top