Connect with us

அட்லீ 6 க்கு ரெடியா – வீடியோ மூலம் டக்கர் அப்டேட் கொடுத்த பிரியா அட்லீ..!!

Cinema News

அட்லீ 6 க்கு ரெடியா – வீடியோ மூலம் டக்கர் அப்டேட் கொடுத்த பிரியா அட்லீ..!!

இயக்குநர் அட்லீயின் அடுத்த படம் குறித்த முக்கிய அப்டேட்டை அவரது மனைவி பிரியா அட்லீ வெளியிட்டுள்ளார்.

இந்திய சினிமாவில் இருக்கும் மாஸ் இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் அட்லி. தனது குருவை போலவே பிரம்மாண்டத்திற்கு பெயர்போன இயக்குனர் என்ற பெயரை பெற்றுள்ள இயக்குனர் அட்லீ அடுத்ததாக என்ன செய்யப்போகிறார் என்று ரசிகர்கள் செம ஆவலுடன் காத்திருக்கின்றனர் .

இந்நிலையில் இயக்குனர் அட்லீயின் காதல் மனைவியான பிரியா அட்லீ தற்போது அட்லீயின் 6 ஆவது படத்தின் குட்டி அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அட்லீயின் அலுவலகத்தில் அட்லீ தனது படக்குழுவுடன் சேர்ந்து ஏதோ முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் . கையில் லேப்டாப் போர்டு என மிகவும் விறுவிறுப்பான ஆலோசனையில் அட்லீ ஈடுபட்டிருக்கும் வீடியோவை பிரியா அட்லீ தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது. மேலும் அட்லீ தனது அடுத்த படத்தை யாரை வைத்து இயக்க போகிறார் இவரது படத்தில் யாரெல்லாம் நடிக்க போகிறார்கள் என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பேட்டிங்கில் சீறிப்பாய்ந்த டெல்லி அணி - லக்னோவுக்கு 209 ரன்கள் இலக்கு..!!

More in Cinema News

To Top