Connect with us

முதல் முறை வாடகை வீட்டில் இருக்கிறேன்: ரவி மோகன் உருக்கம்..

Featured

முதல் முறை வாடகை வீட்டில் இருக்கிறேன்: ரவி மோகன் உருக்கம்..

நடிகர் ஜெயம் ரவி தற்போது தனது பெயரை அதிகாரப்பூர்வமாக ரவி மோகன் என மாற்றிக் கொண்டுள்ளார். நடிகராக தனக்கென ஒரு முத்திரை பதித்துள்ள அவர், தற்போது தயாரிப்பாளராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார்.

தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால், தற்போது விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது. இருவரும் ஒட்டியிருந்த வாழ்க்கையை விட்டு விலகி, தனித் தனியாக வாழ்ந்து வருகிறார்கள்.

இந்த சூழ்நிலையில், ரவி மோகனின் நெருங்கிய தோழியாக இருந்த கெனிஷா சமீபத்தில் ஒரு ஆல்பம் பாடலை வெளியிட்டார். அந்த பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனை கொண்டாடும் விதமாக சினிமா துறையினருக்கான பார்ட்டி ஒன்றை இருவரும் சேர்ந்து ஏற்பாடு செய்தனர்.

இந்நிலையில், நடிகர் ரவி மோகன் நேற்று நடைபெற்ற ‘3BHK’ திரைப்படத்தின் விழாவில் உருக்கமான உரை நிகழ்த்தினார். “நான் பிறந்ததிலிருந்து இன்று வரை என் சொந்த வீட்டில்தான் வாழ்ந்து வந்தேன். தற்போது, ஒரு வாடகை வீட்டில் வசிக்கிறேன்,” என்று உருக்கமாக தெரிவித்தார். இது அவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களை உணர்த்தும் வகையில் பேசப்பட்டதாக ரசிகர்கள் கருதுகின்றனர். ரவி மோகன், தனது மனைவி ஆர்த்தி மற்றும் குழந்தைகளுடன் வாழ்ந்த வீட்டை விட்டு வெளியேறிய விவரம் ஏற்கனவே அனைவருக்கும் தெரிந்ததே.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top