Connect with us

ரவிமோகன்–ஆர்த்தி சர்ச்சை: ஒரு வரியால் சமூக வலைதளமே வெடித்தது!

Cinema News

ரவிமோகன்–ஆர்த்தி சர்ச்சை: ஒரு வரியால் சமூக வலைதளமே வெடித்தது!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ரவிமோகன் — மனைவி ஆர்த்தியுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளால் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகிறார். அவர்களின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இருவரும் சமூக வலைதளங்களில் ஒருவர் மீது ஒருவர் கருத்து தெரிவிக்கக்கூடாது என நீதிமன்றம் முன்னரே உத்தரவிட்டிருந்தது.

ஆனால் சமீபத்தில், ஆர்த்தி சமூக வலைதளத்தில் வெளியிட்ட புதிய பதிவு பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. அந்த பதிவில், “ஒரு தெரபிஸ்ட் சொன்னது — பன்றியுடன் சண்டையிடாதே… நீயும் பன்றியும் சேற்றில் சிக்கிக் கொள்வீர்கள்; ஆனால் அந்த சேற்றில் மகிழ்ச்சியாக விளையாடுவது பன்றிதான்!” என அவர் எழுதியுள்ளார்.

இந்த வாசகம், ரவிமோகன் மற்றும் பாடகி கெனிஷாவை மறைமுகமாக குறிக்கும் வரிகளாகவே ரசிகர்கள் கருதுகின்றனர். இதனால் அந்த பதிவு தற்போது வைரலாகி, சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பொங்கலுக்கு வரவிருக்கும் ‘பராசக்தி’: டப்பிங் தொடங்கிய சிவகார்த்திகேயன்

More in Cinema News

To Top