Connect with us

ரவி மோகனிடம் ரூ.10 கோடி இழப்பீடு கோரிக்கை – உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

Featured

ரவி மோகனிடம் ரூ.10 கோடி இழப்பீடு கோரிக்கை – உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

தமிழ் சினிமாவில் நடித்தும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் கவனத்தை ஈர்த்தவராக இருந்தவர் நடிகர் ரவி மோகன். கடந்த சில வருடங்களாக அவரைச் சுற்றி தொடர்ந்து விவாதங்கள் எழுந்துகொண்டே வருகின்றன.

தற்போது, இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் ‘பராசக்தி’ படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி, இவர் சமீபத்தில் ‘ரவி மோகன் ஸ்டூடியோஸ்’ என்ற பெயரில் ஒரு புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, அதன் மூலம் ‘ப்ரோகோடு (Brocode)’ என்ற படத்தை தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த 2024ஆம் ஆண்டு, இரண்டு படங்களில் நடிக்க ரவி மோகன் ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும், அதற்காக ரூ.6 கோடி முன்பணம் பெற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அந்த ஒப்பந்தத்தின் படி, குறிப்பிட்ட நிறுவனத்தின் படங்களில் நடிக்காமல், பிற தயாரிப்பு நிறுவனங்களின் படங்களில் நடித்ததாக புகார் எழுந்துள்ளது.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட நிறுவனம் மனுவொன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த மனு சென்னை நீதிமன்றத்தில் நீதிபதி அப்தூல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கில் நடிகர் ரவி மோகன் பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும், இதற்கான விசாரணையை ஜூலை 23ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top