Connect with us

இந்தி, தமிழ், தெலுங்கு என்று பார்க்க மாட்டேன்!” – ராஷ்மிகா மந்தனாவின் பேச்சு வைரல்..

Featured

இந்தி, தமிழ், தெலுங்கு என்று பார்க்க மாட்டேன்!” – ராஷ்மிகா மந்தனாவின் பேச்சு வைரல்..

நேஷனல் க்ரஷ் என ரசிகர்கள் அன்புடன் அழைக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனா, நேற்று நடைபெற்ற ‘குபேரா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியது வைரலாகியுள்ளது. இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் ‘குபேரா’. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானதும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதையடுத்து, நேற்று பிரம்மாண்டமாக இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் மேடையேறி பேசிய நடிகை ராஷ்மிகா, “இந்தி, தமிழ், தெலுங்கு என மொழிப் பேதம் பார்க்கவே நான் விரும்பவில்லை. நல்ல கதைகள் தமிழில் இருந்து வந்தால், ஓடோடி இங்கே வந்துவிடுவேன். பான் இந்தியா படங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என்ற எண்ணமும் என்னிடம் இல்லை. ரசிகர்களுக்குப் பிடிக்கும், நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் மட்டுமே நடிக்க விரும்புகிறேன்” என கூறினார்.

அண்மையில், ராஷ்மிகா கன்னடத்தில் நடிப்பதை தவிர்க்கிறாரா என்ற சர்ச்சைகள் எழுந்திருந்தாலும், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் தொடர்ச்சியாக பெரிய படங்களில் நடித்து வருகிறார். புஷ்பா 2, அனிமல், சாவா போன்ற வெற்றிப்படங்களில் நடித்துள்ள ராஷ்மிகா, தற்போது பாக்ஸ் ஆபிஸில் பெரிய வரவேற்பைப் பெறும் முன்னணி நடிகையாக பார்க்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top