Connect with us

ஜாய் கிரிஸில்க்கு போட்டியாக முதல் மனைவியை கூட்டிட்டு வந்த ரங்கராஜ்

madhampatti

Cinema News

ஜாய் கிரிஸில்க்கு போட்டியாக முதல் மனைவியை கூட்டிட்டு வந்த ரங்கராஜ்

Madhampatti Rangaraj: மாதம்பட்டி ரங்கராஜ் மீது நடிகை ஜாய் கிரிஸ்டா அளித்த புகார், தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.பல நாட்களாக அமைதியாக இருந்த ரங்கராஜ், நேற்றிரவு இறுதியாக வாயைத் திறந்தார். நீண்ட விளக்கம், பல கேள்விகளுக்கு பதில், சில புதுப் பிரச்சனைகளுக்கும் வழி!

madhampatti
madhampatti

அதாவது, மகளிர் ஆணையம் இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பி, நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை ஏமாற்றிவிட்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

தனக்கும் ரங்கராஜுக்கும் திருமணம் நடந்ததாக கூறி, திருமண புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தார் கிரிஸில்டா. இந்நிலையில், ரங்கராஜ் தனது முதல் மனைவி ஸ்ருதியுடன் ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டது, ஜாய் கிரிஸில்டாவை கடுப்படையச் செய்ததாகவும், அதன் பின்னரே அவர் இந்தப் புகாரை அளித்ததாகவும் கூறப்படுகிறது.

தற்போது இந்த விவகாரம் தமிழ் திரைத்துறையில் பெரும் பரபரப்பை கிளப்பி, இருவரும் விரைவில் மகளிர் ஆணையத்தின் முன்னிலையில் ஆஜராகவிருக்கிறார்கள் என்று தகவல்! புகார் அளித்ததிலேயே நின்றுவிடாமல், ரங்கராஜ் தன்னை அனுப்பிய வீடியோக்கள், இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் என ஒவ்வொன்றாக சமூக வலைதளங்களில் வெளியிட்டார் ஜாய் கிரிஸில்டா.

இதற்கெல்லாம் எந்த பதிலும் அளிக்காமல், மாதம்பட்டி ரங்கராஜ் அமைதியையே காத்திருந்தார். ஆனால் நிலைமை மெதுவாக கைமீறி போகும் நிலைக்கு வந்ததை உணர்ந்த அவர்,ஜாய் கிரிஸில்டா இனிமேல் தன்னைப் பற்றி எந்தவித பேச்சும் நடத்தக்கூடாது என நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

ஆனால் அதிரடியாக, நீதிமன்றம் அந்த மனுவை நிராகரித்து — அவரை மௌனப்படுத்த முடியாது என தெளிவாக உத்தரவிட்டது!இதனால், மாதம்பட்டி ரங்கராஜ் – ஜாய் கிரிஸில்டா சர்ச்சை இப்போது திரைத்துறையின் மிகவும் பேசப்படும் விவகாரமாக மாறியுள்ளது! இதனைத் தொடர்ந்து மகளிர் காவல் நிலையத்தில் ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிஸில் ஆஜராக வந்தார்கள். ஆனால் யாரும் ரங்கராஜுடன் முதல் மனைவி ஸ்ருதியும் வந்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.

அந்த வகையில் சுருதி மற்றும் ஜாய் கிரிஸில் இரண்டு பேரும் நேருக்கு நேர் சந்திக்கும்படி சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால் இருவருமே பேசாமல் முகத்தை திருப்பிவிட்டு போய் விட்டதாக அங்கு இருந்தவர்கள் கூறி இருக்கிறார்கள் மேலும் தொடர்ந்து ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிஸில்டா உடன் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

More in Cinema News

To Top