Connect with us

“ரன்பீர் கபூரும், ராஷ்மிகாவும் நடித்த ‘Animal’ படத்தின் ரன் டைம் இவ்வளவு நேரமா?! வெளியான ஷாக்கிங் தகவல்!”

Cinema News

“ரன்பீர் கபூரும், ராஷ்மிகாவும் நடித்த ‘Animal’ படத்தின் ரன் டைம் இவ்வளவு நேரமா?! வெளியான ஷாக்கிங் தகவல்!”

விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் கடந்த 2017ம் ஆண்டு வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படம் குறைந்த பட்ஜெட்டில் உருவாகி 100 கோடிக்கும் அதிகமாக வசூல் ஈட்டியது. அந்த படம் தமிழில் ஆதித்ய வர்மா என்றும் இந்தியில் கபீர் சிங் என்றும் ரீமேக் செய்யப்பட்டது.

பாலிவுட்டில் கபீர் சிங் படத்தை சந்தீப் ரெட்டி வங்காவே இயக்கிய நிலையில், அந்த படம் 400 கோடி வசூலை ஈட்டியது. இந்நிலையில், அடுத்ததாக ரன்பீர் கபூரை வைத்து அனிமல் படத்தை இயக்கி உள்ளார். கன்னட திரையுலகத்தில் நடிக்க ஆரம்பித்து, தெலுங்கு, தமிழில் கலக்கி வந்த ராஷ்மிகா மந்தனா அடுத்ததாக ரன்பீர் கபூருடன் இணைந்து அனிமல் படத்தில் நடித்துள்ளார்.

வரும் டிசம்பர் 1ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்கில் அந்த படம் வெளியாக உள்ளது. ஏற்கனவே வெளியான டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும், அந்த லிப் கிஸ் பாடலும் படத்திற்கான ஹைப்பை அதிகரித்துள்ளது. இந்நிலையில், அனிமல் படத்தின் ரன் டைம் 3 மணி நேரம் 21 நிமிடங்கள் என்கிற தகவல் தற்போது வெளியாகி அதிர்ச்சியூட்டி உள்ளன.

படத்திற்கு அதுவே மைனஸ் ஆக அமைந்து விடாமல் இருந்தால் சரி தான் என்று ரசிகர்கள் இப்பவே பயப்பட ஆரம்பித்துள்ளனர். தியேட்டர் ஒனர்களுக்கே இந்த ரன் டைமில் படத்தை வெளியிட்டால் ஒரு நாள் 4 ஷோக்கள் தான் திரையிட முடியும் என்கிற தயக்கத்தில் இருப்பதாகவும் கூறுகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஊழலை எதிர்த்து நின்றால் கைது செய்வீர்களா..? - கொதிக்கும் அன்புமணி

More in Cinema News

To Top