Connect with us

ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ முதல் நாள் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா?

Featured

ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ முதல் நாள் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா?

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண் நடிப்பில், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவான “கேம் சேஞ்சர்” படம் சமீபத்தில் வெளிவந்தது. இப்படத்தை தில் ராஜு தயாரித்து, கியாரா அத்வானி, அஞ்சலி, சமுத்திரக்கனி, எஸ்.ஜே. சூர்யா, ஜெயராம் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு மிகவும் அதிகம் இருந்தது.

என்றாலும், படம் வெளியான பின்னர் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் வெளியாகி உள்ளன. சிலர் படம் பற்றி கடுமையான விமர்சனங்களை முன் வைத்து, இயக்குநர் ஷங்கர் “இந்தியன் 2” படத்தில் சேர்த்ததை விட “கேம் சேஞ்சர்” படத்தில் எதுவும் சிறப்பாக இல்லை என்றும் கூறி உள்ளனர்.

இதற்கிடையில், “கேம் சேஞ்சர்” திரைப்படம் உலகளவில் முதல் நாள் ரூ. 80 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது, இது படத்திற்கு ஒரு வரவேற்கக்கூடிய திறக்கலை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top