Connect with us

‘கூலி’ ரஜினி போஸ்டரில் வாட்ச்சுகளுக்கு பின்னால் உள்ள ரகசியம் தெரியுமா?

Featured

‘கூலி’ ரஜினி போஸ்டரில் வாட்ச்சுகளுக்கு பின்னால் உள்ள ரகசியம் தெரியுமா?

மிக விரைவில் திரைக்கு வரவுள்ள திரைப்படமான ‘கூலி’ குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்திரைப்படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வருகிறது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இதன் கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் பிரமாண்டமான படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இசையை அனிருத் வழங்குகிறார். படத்தில் நாகர்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், சோபின் ஷபீர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்தனை நட்சத்திரங்கள் ஒரே படத்தில் இணைந்திருப்பது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இப்படம் 2025 ஆகஸ்ட் 14ம் தேதி உலகமெங்கும் வெளியிடப்பட உள்ளது.

இதற்கிடையில், ‘கூலி’ படத்தின் கதையின் பின்னணியைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. ஆரம்பத்தில், இப்படத்திற்கு ‘கூலி’ என பெயர் வைக்கப்படுமுன் வெளியான ஒரு போஸ்டரில், ரஜினிகாந்த் கை நிறைய தங்க வாட்ச்களை அணிந்துவிட்டு வில்லத்தனமாக சிரிக்கிறார். அந்த தங்க வாட்ச்கள் வெறும் அலங்காரமாக அல்லாது, ஒவ்வொன்றும் ஒரு முக்கிய காரணத்துடன் சேர்க்கப்பட்டுள்ளன.

அந்த தங்க வாட்ச்களில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு பழமையான, ஆனால் அபாயகரமான டெக்னாலஜியை பயன்படுத்தி, ‘தேவா’ என்ற பழைய கடத்தல் மாஃபியா தலைவன், தனது பழைய குழுவை மீண்டும் ஒன்று சேர்க்க நினைக்கிறாராம். ஆனால் அவர் திட்டமிட்டது போல அது எளிதாக நடைபெறவில்லை. அந்த முயற்சி, அவருக்கே ஆச்சரியமாக ஒரு புதிய, மோசமான உலகத்தை உருவாக்குகிறது. அந்த உலகத்தில் குற்றம், பேராசை மற்றும் அதிகார பசிக்கே முக்கிய இடம் உண்டு என்று கூறப்படுகிறது. இந்தக் கதை மையமாக இப்படம் உருவாகி வருகிறது என்பதாலேயே ரசிகர்களிடையே திரைப்படத்தின் மீது அபார எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  விபத்தில் சிக்கிய விஜய் தேவரகொண்டா – மருத்துவர்கள் அளித்த அப்டேட்!

More in Featured

To Top