Connect with us

“லால் சலாம் இசை வெளியீட்டு விழா எப்போது? மீண்டும் ஒரு குட்டிக்கதை சொல்ல ரெடியாகும் தலைவர்!”

Cinema News

“லால் சலாம் இசை வெளியீட்டு விழா எப்போது? மீண்டும் ஒரு குட்டிக்கதை சொல்ல ரெடியாகும் தலைவர்!”

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’லால் சலாம்’ படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளையும் தொடங்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

முதல் கட்டமாக இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் டிசம்பர் 20ஆம் தேதி இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் காக்கா கழுகு கதையை கூறிய ரஜினிகாந்த், ’லால் சலாம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் ஒரு குட்டி கதையை கூறுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் இசை வெளியீட்டு விழாவை அடுத்து ட்ரைலர், சிங்கிள் பாடல் உட்பட பல ப்ரொமோஷன் பணிகளையும் அடுத்தடுத்து செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள இந்த படத்தில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி உள்ள இந்த படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top