Connect with us

ரஜினியின் ஜெயிலர் 2: வெளியீட்டுக்கு நெல்சனின் அதிரடி கண்டிஷன்!

Featured

ரஜினியின் ஜெயிலர் 2: வெளியீட்டுக்கு நெல்சனின் அதிரடி கண்டிஷன்!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் “ஜெயிலர்” திரைப்படம், 2023 ஆம் ஆண்டு வெளியானபோது, மாபெரும் வெற்றியை பெற்றது. உலகளவில் ரூ. 635 கோடிக்கும் மேல் வசூல் செய்து, தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஹிட் படமாக இடம்பிடித்தது. இப்படத்திற்கு இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கினார், மற்றும் இசையமைப்பாளர் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்தார். இதில் ரஜினிகாந்த் தவிர, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷ்ராஃப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்போது, “ஜெயிலர் 2” படத்தினை பற்றி ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளதனால், அடுத்து வெளிவரும் படம் குறித்த செய்திகள் பரவுகின்றன. சன் பிக்சர்ஸ், ஜெயிலர் 2 படத்தை அடுத்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் பண்ண வேண்டும் என்று முடிவு பண்ணி வைத்திருந்தது. ஆனால், இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இதனை 2026 ஆம் ஆண்டில் வெளியாக வேண்டும் என்று கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது, ஏனெனில் அவர் படத்திற்கு குறைந்தது 13 மாதம் முன்னேற்பாடுகளை செய்ய வேண்டுமென தயாரிப்பு நிறுவனத்திடம் தெரிவித்து இருக்கிறார்.

அந்த வகையில், 2026 ஆம் ஆண்டு தான் ஜெயிலர் 2 படம் வெளியாகும் என கூறப்படுகிறது. 

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  🎬 “Negativity எல்லை மீறினால் Block!” – சமந்தாவின் திறந்த மனசு பேச்சு

More in Featured

To Top