Connect with us

விண்வெளி அறிவியல் கண்காட்சியில் திடீரென வந்த ரஜினி! மாணவர்கள் ஹேப்பி!

Featured

விண்வெளி அறிவியல் கண்காட்சியில் திடீரென வந்த ரஜினி! மாணவர்கள் ஹேப்பி!

சென்னை வேளச்சேரியில் உள்ள ஆஷ்ரம் பள்ளியில் நடைபெறும் விண்வெளி அறிவியல் கண்காட்சியில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் கலந்துகொண்டு பார்வையிட்டு மகிழ்ந்தனர்.

இந்த கண்காட்சி, ஸ்பேஸ் செக் கிரியேஷன்ஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜூன் 10ஆம் தேதி வரை இது நடைபெற உள்ளது. இதில் எந்தவிதமான கட்டணமும் இல்லை. இது பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. ராக்கெட் மாதிரிகள், தொலைநோக்கு உருவாக்கும் திறந்தவெளி திரையரங்கம், நிலவில் விக்ரம் லேண்டர் தரை இறங்கிய பகுதியின் மாதிரிகள் உள்ளிட்ட பல விஞ்ஞான அதிசயங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.

பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், உறவினர்கள் என யாரும் இந்த கண்காட்சியை இலவசமாக பார்வையிடலாம். இதற்கான ஏற்பாடுகள் ஸ்ரீ தயா பவுண்டேஷன் மற்றும் பாரத் சேவா செயல் திட்டம் மூலம் செய்யப்பட்டுள்ளன. இந்நிகழ்வில் ரஜினிகாந்துடன் புகைப்படம் எடுத்து மாணவர்கள் மகிழ்ந்தனர்.

ரஜினியின் புதிய அப்டேட்! நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ஜெயிலர் 2 படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். படப்பிடிப்பு ஆனைகட்டி பகுதிகளில் நடைபெற்றுவிட்டு தற்போது சென்னை திரும்பியுள்ளார். இப்படம் டிசம்பர் மாதம் முடிவடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அனிருத் இசையமைக்கிறார். ரம்யா கிருஷ்ணன், மிர்னா மோகன் உள்ளிட்டோர் மீண்டும் அதே கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். மோகன் லால், சிவராஜ் குமார் உள்ளிட்டோரும் இதில் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினி ஓய்வு எடுக்கப் போவதாக வதந்தி பரவியது. ஆனால், லதா ரஜினிகாந்த் மறுத்துள்ளார். “ரஜினி இன்னும் படங்கள் கேட்டு வருகிறார். விரைவில் அறிவிப்பு வரும்,” என்று தெரிவித்துள்ளார். ரஜினி ரசிகர்களுக்கு இது ஒரு மகிழ்ச்சியான செய்தி!

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top