Connect with us

ரஜினியின் ‘கூலி’ படம் சாதனை! யார் எத்தனை கோடிக்கு வாங்கியுள்ளனர் தெரியுமா?

Featured

ரஜினியின் ‘கூலி’ படம் சாதனை! யார் எத்தனை கோடிக்கு வாங்கியுள்ளனர் தெரியுமா?

இந்த நிலையில், பாக்ஸ் ஆபிஸ் வேட்டையில் அடுத்ததாக களமிறங்க உள்ள படம் தான் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ‘கூலி’. இந்தப் படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ளது. இதில் ரஜினிகாந்த் உடன் சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும், பாலிவுட் நடிகர் அமீர்கான் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளாராம். அதேபோல், நடிகை பூஜா ஹெக்டே ஒரு பிரம்மாண்டமான பாடலுக்கு நடனமாடியுள்ளார். இசை அமைத்துள்ளார் அனிருத். ‘கூலி’ படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகமெங்கும் grand release ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரிலீஸ் தேதியைக் கொண்டு படம் தொடர்பான வியாபாரமும் மிகவும் சூடுபிடித்துள்ளது.

அதற்கமைய, தெலுங்கு பதிப்பை வெளியிட ‘Vedhaksara Movies’ என்ற நிறுவனம் உரிமையை பெற்றுக்கொள்ள முயற்சிக்கிறது. ராமாராவ் என்ற தயாரிப்பாளர், இந்த படத்தின் தெலுங்கு உரிமையை ரூ. 46 கோடிக்கு மேல் கொடுத்து வாங்க முன்வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தற்போது ஒரு பாக்ஸ் ஆபிஸ் சாதனை விலை என சினிமா வட்டாரங்களில் பெருமையாக பேசப்பட்டு வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “Richard Rishi உடன் ரக்ஷனா ஹீரோயின்! Draupadi 2 First Look Trending!”

More in Featured

To Top