Connect with us

ரஜினி 173: கமல் ஹாசன் தயாரிப்பில் சூப்பர் ஸ்டாரின் புதிய அவதாரம்!

Cinema News

ரஜினி 173: கமல் ஹாசன் தயாரிப்பில் சூப்பர் ஸ்டாரின் புதிய அவதாரம்!

பல ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவின் இரு ஜாம்பவான்கள் கமல் ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் மீண்டும் ஒரே படத்தில் இணைவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கமல் ஹாசன் தயாரிப்பில் உருவாகும் ரஜினி 173 படத்தை, டான் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சிபி சக்ரவத்தி இயக்குகிறார்; இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்தர் பணியாற்றுகிறார். ஆரம்பத்தில் சுந்தர் சி இயக்குவதாக இருந்த நிலையில் ஏற்பட்ட மாற்றத்துக்குப் பிறகு, புதிய இயக்குநர் தேர்வு சினிமா வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியது.

மேலும், இந்த படம் ஹாலிவுட் ஹிட் The Outfit-இன் தழுவலாக உருவாகும் என தகவல்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. 1970-களின் பின்னணியில் அமைந்த கதையில், ரஜினிகாந்த் டெய்லர் கதாபாத்திரத்தில் தோன்றவுள்ளதாக கூறப்படுவது படத்தின் ஸ்டைல் மற்றும் கதைசாயலைப் பற்றிய ஆர்வத்தை அதிகரித்துள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகாத நிலையில், இந்த லேட்டஸ்ட் அப்டேட்கள் ரஜினி 173-ஐ வரவிருக்கும் முக்கியமான தமிழ் திரைப்படங்களில் ஒன்றாக மாற்றியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தமிழ் OTT தளங்களில் இந்த வாரம் புதிய படங்கள் வெளியீடு – ரசிகர்களுக்கு வீட்டு திரையரங்க அனுபவம்!

More in Cinema News

To Top