Connect with us

நடிகர் ராஜேஷ் மரணம்… நெருங்கிய நண்பரை இழந்தேன் என ரஜினிகாந்த் இரங்கல்!

Featured

நடிகர் ராஜேஷ் மரணம்… நெருங்கிய நண்பரை இழந்தேன் என ரஜினிகாந்த் இரங்கல்!

திரை உலகில் குணசித்திர நடிகர் ராஜேஷ் இன்று உடல் நலக் குறைவால் காலமானார்.
கிட்டத்தட்ட 150 படங்களில் ஹீரோவாகவும், கேரக்டர் ஆர்டிஸ்டாகவும் நடித்த இவர், எழுத்தாளர் மற்றும் ஜோதிடராகவும் பல திறமைகள் கொண்டவர்.
அவர் தனது நடிப்பு பயணத்தை இயக்குநர் கே. பாலசந்தர் இயக்கிய தொடர்கதை படத்தின் மூலம் தொடங்கினார்.

மன்னார்குடியை சொந்த ஊராக கொண்ட ராஜேஷ் ஒரு காலத்தில் ஆசிரியராகவும் பணியாற்றினார். அவர் நடித்த “அச்சமில்லை அச்சமில்லை”, “அந்த ஏழு நாட்கள்” உள்ளிட்ட படங்கள் வெற்றியடைந்தன. 80களில் குணசித்திர நடிகராக பெயர் பெற்ற இவர் இயல்பான நடிப்பு, வாஞ்சையான பார்வையால் ரசிகர்களைக் கவர்ந்தார்.
நடிகர் மட்டுமல்ல, எழுத்தாளர், ஜோதிடராகவும் ராஜேஷ் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். சமீபத்தில் அவர் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்றிருந்தார்.
அவர் 76 வயதில் காலமானார்.

திரை உலகில் ராஜேஷின் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ரஜினி, “என் நெருங்கிய நண்பர், நடிகர் ராஜேஷ் அவர்களின் அகால மரணம் எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும். அவரது குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று கூறியுள்ளார். மற்றும் பல திரைத்துறை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top