Connect with us

சி.எஸ்.கே. அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்ட ரச்சின் ரவீந்திரா – உற்சாக வீடியோ வெளியிட்டு கொண்டாடிய ரச்சின்..!

Featured

சி.எஸ்.கே. அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்ட ரச்சின் ரவீந்திரா – உற்சாக வீடியோ வெளியிட்டு கொண்டாடிய ரச்சின்..!

நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாட இளம் நியூசிலாந்து வீரரான ரச்சின் ரவீந்திராவை சி.எஸ்.கே. அணி ஏலத்தில் எடுத்தது குறித்து ரச்சின் ரவீந்திரா உற்சாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

துபாயில் நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் மினி ஏலம் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . இந்த ஏலத்தில் தங்களை அணிக்கு தேவையான பல இளம் வீரர்களை 10 அணிகளும் போட்டி போட்டுகொண்டு ஏலத்தில் எடுத்து வருகிறது .

இந்நிலையில் ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற சாதனையை ஆஸி கேப்டன் பாட் கம்மின்ஸ் படைத்த சில நிமிடங்களிலேயே அதனை உடைத்து புதிய வரலாறு படைத்துள்ளார் சக அணி வீரான மிட்செல் ஸ்டார்க். ஸ்டார்க்கை ரூ.24.75 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது . பாட் கம்மின்ஸை ரூ.20.5 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏலத்தில் எடுத்துள்ளது .

இதையடுத்து சி.எஸ்.கே. அணியின் புதிய வீரராக இளம் நியூசிலாந்து வீரரான ரச்சின் ரவீந்திரா இணைந்துள்ளார் . இவரை 1.8 கோடிக்கு சென்னை சூப்பர் அணி ஏலத்தில் எடுத்துள்ளது .ரச்சின் ரவீந்திராவுக்கு இது முதல் ஐபிஎல் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தான் சென்னை அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டதை கொண்டாடும் வகையில் ரச்சின் வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.தற்போது அந்த வீடியோ இணையத்தில் செம வைரல் ஆகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நவம்பர் 6-ல் தேர்தல் சின்னம் கேட்டு டெல்லி செல்கிறார் விஜய்! எந்த சின்னத்தில் களம்?

More in Featured

To Top