Connect with us

பிரியங்கா சங்கரின் எமோஷனல் பதிவு: ‘புது வரவு, புது உறவு..

Featured

பிரியங்கா சங்கரின் எமோஷனல் பதிவு: ‘புது வரவு, புது உறவு..

தமிழ் சினிமாவில் பலரின் நெஞ்சங்களில் இடம்பிடித்தவர் ரோபோ ஷங்கர். விஜய் டிவியின் மூலம் பரவலாக அறியப்பட்ட அவர், இன்று வெள்ளித்திரையில் முக்கிய நடிகராக திகழ்கிறார்.

இவர் மகள் இந்திரஜா ஷங்கர், தளபதி விஜய்யின் பிகில் படத்தில் அறிமுகமாகியவர். ஆனால் அதன் பிறகு, இவர் படங்களில் நடிக்கவில்லை. சமீபத்தில், இந்திரஜா தனது மாமாவான கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த வாரம், இவருக்கு ஆண் குழந்தை பிறந்ததை உறுதிப்படுத்தும் மகிழ்ச்சியான செய்தி வெளியானது.

இந்த நிகழ்வால், ரோபோ ஷங்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியில் மிதந்தனர். இந்நிலையில், ரோபோ ஷங்கரின் மனைவி பிரியங்கா சங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேரனை கையில் வைத்து ஆட்டிக் கொண்டும் தூங்க வைக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

அதில், “புது வரவல்ல இது, புது உறவு ஏங்கி இருந்த கைகளுக்கு உன்னை ஆர தழுவ ஆசை வந்ததடா என் அன்பு பேரனே” என்ற உணர்ச்சிப் புகைப்பட உரையை வெளியிட்டு, அவர் தன் பேரனுக்கு என்னும் அன்பையும், மகிழ்ச்சியையும் பகிர்ந்துள்ளார். இந்த விடியோவும், அந்த உணர்ச்சி மிகுந்த பதிவும் குடும்பத்தின் இனிமையான தருணங்களை வெளிப்படுத்தும் விதமாக மாறியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top